உலகம்

மில்லியன் டாலர் பெறுமதியான கேள்வியாக இப்போது உலகெங்கும் இருப்பது எப்போது இந்த வைரஸ் தாக்கம் முடியும் அல்லது குறையும் என்பதே. ஆனால் வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நாட்டிலும் இதற்கான துல்லியமான பதிலைத் தரமுடியாத நிலையிலேயே வல்லுனர்கள் இருப்பதுதான் யதார்த்தம்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் உச்சம் கோடையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடும் என்று சுவிஸ் அரசு நம்புகிறது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் உச்சம் எப்போது வரும், எப்போது அது வீழ்ச்சி நிலை அடையும் என, சுவிஸ் தொற்று நோய்கள் பிரிவின் முதலாளி டேனியல் கோச் அவர்கள் செய்தியானர் மாநாடு ஒன்றில் பேசுகையில், வைரஸின் கணிக்க முடியாத தன்மையைக் கருத்தில் கொண்டு ஒரு முன்னறிவிப்பை செய்ய தயங்கினாலும், “நான் ஒரு முன்னறிவிப்பை செய்யத் துணியவில்லை. ஆனால் தற்போதைய அலை கோடையின் தொடக்கத்தில் முடிந்துவிடும் என்று நாங்கள் கருதுகிறோம். ”என்று கூறினார்.

சுவிற்சர்லாந்தின் உள்துறை அமைச்சர் அலைன் பெர்செட் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறுகையில்; " ​​உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோய்களின் தினசரி எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், அது நெருக்கடியின் முடிவைக் குறிக்காது. மக்கள் பாதிக்கப்படக்கூடிய குழு நிலை ஆபத்துக்கள் உள்ளன. ஆகையால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரவேண்டும்." என்றார்.

அவர் மேலும் பேசுகையில்; " சுவிஸ் பொதுமக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் . காலநிலை மேம்படத் தொடங்கும் போது சமூக தொலைதூர நடவடிக்கைகளை முறியடிக்கும் எண்ணங்களும், செயல்களும், உருவாகும். அதை நாம் தவிர்க்கவேண்டும் " என்றும் அவர் எச்சரித்தார்.

"ஏப்ரல் மாத தொடக்கத்தில் குறிப்பாக வானிலை நன்றாக இருக்கும், நீங்கள் வெளியில் இருக்க விரும்புவீர்கள். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் முந்தைய ஆண்டுகளை விட வித்தியாசமான ஏப்ரல் மாதமாக இருக்கும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒன்றாக நிற்க வேண்டும், விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்." என்றார்.

பெப்ரவரி 25 ஆம் தேதி டிசினோ மாநிலத்தில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டதிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சுவிற்சர்லாந்தில் அதிகமாகவுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி புதன்கிழமை மாலை நிலவரப்படி, நாடாளவியரீதியில் 17,785 தொற்றாளர்கள் மாநிலரீதியான புள்ளி விபரங்களின்படி உறுதிசெய்யப்பட்டுள்ளன. அதேபோல்
வைரஸ் தாக்கத்தின் முதல் மரணம் பதிவாகிய மார்ச் 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், மொத்தம் 488 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசுகளின் அறிவிப்பின் தொகுப்பா மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி சுவிற்சர்லாந்தின் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பெறும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் இம்முறை நடைபெறாது என மாநில ரீதியான அறிவிப்புக்கள் வெளியாகத் தொடங்கியள்ளன.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.