உலகம்

Worldometers இணையத் தளத்தின் அண்மைய அதிகாரப்பூர்வ தகவல் படி உலகின் 203 நாடுகளைப் பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த முக்கிய புள்ளி விபரங்கள் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்தத் தொற்றுக்கள் : 960 063
மொத்த இறப்புக்கள் : 49 156
குணமடைந்தவர்கள் : 203 114
ஆக்டிவ் தொற்றுக்கள் : 707 793
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 36 205

நாடளாவிய புள்ளி விபரம்,

அமெரிக்கா : மொத்தத் தொற்றுக்கள் : 215 357 : மொத்த இறப்புக்கள் : 5113
இத்தாலி : 110 574 : 13 155
ஸ்பெயின் : 110 238 : 10 003
சீனா : 81 589 : 3318
ஜேர்மனி : 79 465 : 959
பிரான்ஸ் : 56 989 : 4032
ஈரான் : 50 468 : 3160
பிரிட்டன் : 33 718 : 2921
சுவிட்சர்லாந்து : 18 267 : 505
துருக்கி : 15 679 : 277
பெல்ஜியம் : 15 348 : 1011
நெதர்லாந்து : 14 697 : 1339
ஆஸ்ட்ரியா : 10 927 : 158
தென்கொரியா : 9976 : 169
கனடா : 9731 : 129
ரஷ்யா : 3548 : 30
இந்தியா : 2032 : 58
இலங்கை : 150 : 3

உலக அளவில் கொரொனா தொற்றின் வேகம் 1 000 000 (10 இலட்சம் அல்லது 1 மில்லியனையும்), இறப்புக்களின் வேகம் 50 000 ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடான ஈரானுக்கு அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளையும் மீறி பல ஐரோப்பிய நாடுகள் உதவி செய்ய முன் வந்துள்ளன. பெப்ரவரியில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு அமெரிக்கா முன்வந்த போது அவர்களிடம் இருந்து எந்தவித உதவியையும் நாம் பெற மாட்டோம் எனவும், அமெரிக்கா தீய சிந்தனை கொண்ட எதிரி எனவும் ஈரான் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது ஈரானில் நிலமை மிகவும் மோசமடைந்துள்ளதால் பல ஐரோப்பிய நாடுகள் அதற்கு உதவி செய்ய முன் வந்துள்ளன. முக்கியமாக பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்ஆகியவற்றை ஈரானுக்கு அனுப்பியுள்ளன. இது சர்வதேச அரசியலில் முக்கிய ஒரு திருப்பமாகும். மறுபுறம் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப் பட்ட அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து தேவையான வெண்டிலேட்டர்கள் உட்பட மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய இணக்கப் பாடு எட்டப் பட்டுள்ளது.

இதேவேளை கோவிட்-19 தொற்றை ஏற்படுத்தக் கூடிய கொரோனா வைரஸ் தும்மல் இருமல் மட்டுமன்றி வெகு நுண் துளிகள் மூலமும் குறிப்பிட்ட அளவு தூரத்தில் உள்ளவருக்குப் பரவ வாய்ப்புள்ளது என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை மூலம் தான் இந்த வைரஸ் இவ்வளவு தீவிரத்துடன் பரவி இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நுண் துளிகள் காற்றிலும் குறிப்பிட்ட நேரம் இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வழிமுறை மூலம் கொரோனா பரவவுதைத் தடுக்க உலக நாடுகள் ஊரடங்கு விதிகளை மேலும் தீவிரப் படுத்தியும், அதிக நாட்கள் நீட்டிப்பதும் அவசியம் எனக் கணிக்கப் பட்டுள்ளது. நிச்சயம் இது சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறுக்க முடியாது.

அதேநேரம் இன்று வரை கோவிட்-19 வைரஸானது காற்றின் வழியாக நீண்ட தூரத்துக்கோ அல்லது நீண்ட நேரத்துக்கோ உயிர்ப்புடன் இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று உலக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் தொடுகை மூலமாகப் பரவும் விதம் கூட காற்றின் ஈரப்பதன், வெப்பநிலை மற்றும் மேற்பரப்பின் தன்மை போன்றவற்றில் தங்கி இருப்பதால் இந்த மேற்பரப்புக்களில் சில மணித்தியாலங்கள்  தொடக்கம் சில நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்க முடியும் என்றும் உலக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும், விளக்கங்களும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்களையும் பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்துக :

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

 

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.