உலகம்

இத்தாலியில் கடந்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் தொற்றுநோய் பரவலின் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சியைக் காணத் தொடங்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன என துணை சுகாதார அமைச்சர் பியர்போலோ சிலேரி தெரவித்துள்ளார்.

இத்தாலியின் சிவில் பாதுகாப்புத் துறையின் புதன்கிழமை புள்ளிவிவரங்களின்படி, கொரோனா வைரஸின் 4.782 புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன. இது ஆறு நாட்களில் முதல் முறையாக புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கையின் குறைந்த அளவைக் குறிக்கிறது. மேலும் இந்தத் தொகை படிப்படியாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இத்தாலி வைரஸ் தொற்றுத் தொடங்கியதிலிருந்து இதுவரை 110,574 கொரோனா வைரஸ் வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் தொற்றிலிருந்து மீட்கப்பட்டவர்களும் அடங்குவர்.
புதன்கிழமை புள்ளிவிவரங்களின்படி நோயிலிருந்து மீண்ட புதியவர்கள் 1,118 பேர் உள்ளடங்கலாக மொத்தம் 16,847 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் சற்றுக் குறைந்து வருகிறது. ஆயினும் இதனை உறுதிபடச் சொல்ல முடியாதுள்ளது. இதுவரை நிகழ்ந்த மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 13,155 ஆக உள்ளது. மருத்துவமனைகளுக்கு வெளியே COVID-19 தொடர்பான காரணங்களால் ஏற்படும் இறப்புகள் கணக்கிடப்படாததால் இநத்த தரவு முழுமையடையாது என்று அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

இத்தாலியன் தேசிய உயர் சுகாதார நிறுவனத்தின் தலைவர் சில்வியோ புருசாஃபெரோ கூற்றுப்படி, இத்தாலியின் கொரோனா வைரஸ் தாக்கம் அதன் உச்சத்தில் ஒரு சமநிலைக்கு வந்திருப்பதாக உணரமுடிகிறது. ஆனால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இன்னும் தேவையாகவே உள்ளன.

இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே புதன்கிழமை தெரிவிக்கையில், " நாங்கள் இன்னும் முடிவில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறோம், எனவே ஏப்ரல் 13 வரை நடவடிக்கைகளை நீட்டிக்கும் ஆணையில் கையெழுத்திட முடிவு செய்துள்ளேன். எந்தவொரு நடவடிக்கைகளையும் தளர்த்துவது தொற்றுக்களின் எண்ணிக்கையில் புதிய உயர்வுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்" எனக் கூறினார்.

ஏப்ரல் 1ந்திகதி அறிவிக்கப்பட்ட புதிய அறிவித்தல்களின்படி, மருந்தகங்கள் மற்றும் உணவுக் கடைகளைத் தவிர அனைத்து கடைகளையும் மூடியுள்ளது மற்றும் மிக அத்தியாவசியமான வணிகங்களைத் தவிர மற்ற அனைத்தையும் மூடியுள்ளது, மேலும் வேலை அல்லது அவசரகால சூழ்நிலைகளைத் தவிர வெவ்வேறு நகரங்களுக்கு இடையிலான பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் - உதாரணமாக, மளிகை சாமான்களை வாங்க அல்லது வேலைக்குச் செல்வதற்கு. மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் நடைபயிற்சி அல்லது ஜாகிங் போன்ற சில வகையான உடற்பயிற்சிகள் அனுமதிக்கப்படுகின்றன.

இத்தாலியில் மிகமோசமான உயிரிழப்புக்களைச் சந்தித்த லொம்பார்டியாவில் இருந்து, இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வதற்காககத் தொடர்ந்தும் இராணுவ வண்டிகள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. தொழிற்சாலைகள் பல இயங்காதிருக்கின்ற வேளையில் உடல்களைத் தகனம் செய்யும் இடங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.

நாடாளவிய ரீதியில் பொது மக்கள் வைரஸ் தொற்றின் ஆரம்பநிலையில் இருந்ததைவிட அரசின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இத்தாலியின் தென்பகுதியில் அமைதியாக இருந்த உள்ளூர் மாபியாக் குழுக்கள் ஆங்காங்கே சில வன்முறைகளை ஆரம்பித்திருக்கின்றன.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

“இலங்கை விடயத்தில் நாங்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல.” என்று சீனா தெரிவித்துள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.

சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற எதிலிகள் படகு ஒன்று செனகல் நாட்டின் கடற்கரையில் மூழ்கியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.