உலகம்

உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவும், சீனாவும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் ஆரம்பித்த இடமான சீனாவின் வுஹான் நகரம் அமைந்திருக்கும் ஹுபேய் மாகாணம் இதன் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றது. ஆனால் உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவ சீனாவே காரணம் என அமெரிக்கா உட்பட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இவ்விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கின்றது. மேலும் இந்தியா சீனா இடையே மருத்துவ உபகரணங்களைப் பரிமாறிக் கொள்ள இரு நாட்டுக்கும் இடையே ஏர் இந்தியாவின் சரக்கு விமான சேவை தொடங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 9 ஆம் திகதி ஐ.நா பாதுகாப்புச் சபை தலைவராக இருந்த சீனாவைச் சேர்ந்த ஜாங் ஜூனிக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கடிதம் எழுதியிருந்தார்.

சமீபத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தினை அவசரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற இந்தக் கடிதம் மூலமான பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்துள்ளது. முன்னதாக ஜனவரி வரை இந்த விவகாரத்தில் அதாவது இந்தியா ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா வாதிட்டு வந்தது.

மேலும் ஜனவரியில் காஷ்மீரில் மற்றொரு ரகசிய கூட்டத்தைக் கூட்டவும் சீனா வலியுறுத்தியது. இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனா மனம் மாற்றிக் கொண்டு பாகிஸ்தானின் அவசர கோரிக்கையை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அமுலில் இருந்துவரும் ஊடரங்கில் ஒவ்வொரு மாத முடிவிலும் சில தளர்வுகளை அரசு அறிவித்துவருகிறது.

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.