உலகம்

அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கடந்த வாரம் மேற்கொண்ட சில கணிப்புக்களின் படி தமது நாட்டில் கொரோனா வைரஸின் 2 ஆவது அலையை எதிர்கொள்ள சீனாவின் முக்கிய வர்த்தக நகரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக சீனாவின் முக்கிய வர்த்தக நகரங்களான பீஜிங், ஷங்காய் மற்றும் குவாங்சு உட்பட சில நகரங்களைப் பகுதியளவில் முடக்கி நோய்த் தொற்று பரவாது இருக்கும் கட்டுப்பாடுகளைத் தீவிரப் படுத்தும் சட்டங்கள் அமுலாக்கப் பட்டுள்ளன.

அதாவது இந்த நகரங்களுக்கு வெளி மாநிலத்தில் இருந்து நுழைபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கான விசாக்களும், குடியிருக்கும் அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப் படும். ஒவ்வொரு வாரமும் ஒரேயொரு உள்நாட்டு சேவை வழங்கும் வெளிநாட்டு ஏர்லைன்ஸ் விமானமே இயக்கப் படும். தலை நகரத்துக்கு எந்தவொரு சர்வதேச விமானமும் வர முடியாது. போன்றவை முக்கிய கட்டுப்பாடுகள் ஆகும். மீறுபவர்களுக்குக் கடினமான தண்டனை பெறும் வாய்ப்பும் உள்ளது.

கடந்த வாரம் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்குத் திரும்பிய வெளிநாட்டவர் அல்லது சீனக் குடிமக்கள் மூலமாக ஏற்பட்ட கொரோனா தொற்றுக்கள் மூலமாகத் தான் சீனாவில் இந்த கொரோனா வைரஸின் 2 ஆவது அலையானது ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் 2019 ஆமாண்டு இறுதியில் அறியப் பட்ட புதிய வகைக் கொரோனா வைரஸான கோவிட்-19 இற்குத் தடுப்பு மருந்தோ குணப்படுத்தும் மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. பல மருந்துகள் ஆய்வில் இருந்து வருகின்றது.

 

 

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.