உலகம்

உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல நகரங்களும், உற்பத்தித் துறையும், வணிகமும், தொழில் துறைகளும் முடங்கியுள்ளன.

ஏற்கனவே மக்கள் பீதியில் பொருட்களை வாங்கிக் குவிப்பதால் பல நாடுகளில் பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாகி உள்ளன. இந்நிலையில் உணவு உற்பத்தித் துறையும் பாதிக்கப் பட்டால் உலகம் முழுதும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இத்தகவலை ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புத் தலைவர் கு டாங்க்யு, உலக சுகாதாரத் தாபனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ராபர்ட்டோ அசேவொடே ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 'ஏற்கனவே எல்லைகள் முடக்கம் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்களின் பயண முடக்கம் ஆகியவை விவசாயப் பொருட்கள் வீணாவதை அதிகரிக்கும். எனவே உணவு உற்பத்தித் துறை சார்ந்த தொழிலாளர்கள் பாதுகாக்கப் பட்டு உணவு சப்ளையும் பராமரிக்கப் பட வேண்டும்.

இதற்கு அனைத்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். கொரோனாத் தொற்றுதல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உலகில் நலிந்தவர்களுக்கான பசி மற்றும் ஊட்டச் சத்து குறைப்பாட்டை அதிகரித்து விடக் கூடாது.' எனப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.