உலகம்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி இதுவரை சுமார் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த சமீபத்திய புள்ளி விபரம் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்தத் தொற்றுக்கள் : 1 043 762
மொத்த இறப்புக்கள் : 55 304
குணமடைந்தவர்கள் : 222 332
ஆக்டிவ் தொற்றுக்கள் : 766 126
மோசமான நிலையில் இருப்பவர்கள் : 38 415

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்தத் தொற்றுக்கள் : 246 521 : மொத்த இறப்புக்கள் : 6145
ஸ்பெயின் : 117 710 : 10 935
இத்தாலி : 115 242 : 13 915
ஜேர்மனி : 88 808 : 1193
சீனா : 81 620 : 3322
பிரான்ஸ் : 59 105 : 5387
ஈரான் : 53 183 : 3294
பிரிட்டன் : 38 168 : 3605
சுவிட்சர்லாந்து : 19 303 : 573
துருக்கி : 18 135 : 356
பெல்ஜியம் : 16 770 : 1143
நெதர்லாந்து : 15 723 : 1487
ஆஸ்ட்ரியா : 11 412 : 168
கனடா : 11 283 : 173
தென்கொரியா : 10 062 : 174
ரஷ்யா : 4149 : 34
இந்தியா : 2567 : 72
இலங்கை : 152 : 4

இன்றைய நிலவரப்படி உலகில் மிக அதிக தொற்றுக்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள போதும் 2 ஆவது இடத்தில் இருந்த இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஸ்பெயின் 117 710 தொற்றுக்களுடன் அந்த இடத்தை வகிக்கின்றது. ஆனாலும் இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து இத்தாலியே 13 915 இறப்புக்களுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஜேர்மனி 88 808 தொற்றுக்களுடன் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தொற்று எண்ணிக்கையில் 4 ஆவது இடத்தை வகிக்கின்றது.

இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 2500 ஐக் கடந்துள்ள நிலையில் 25 நாடுகளுக்கென உலக வங்கியால் ஒதுக்கப் பட்ட 1.9 பில்லியன் நிதியுதவியில் 1 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு அளிக்க வியாழக்கிழமை தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. இந்த நிதியுதவியில் பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர்களும், மாலைத்தீவுக்கு 7.3 மில்லியன் டாலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்களும் வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

இன்னும் 15 மாதங்களுக்குள் கொரோனா தொற்றினால் சகல விதங்களிலும் பாதிக்கப் பட்ட நாடுகளின் நிலமையை மேம்படுத்துவதற்கு சுமார் 160 பில்லியன் டாலர் வரை வழங்கத் தயார் நிலையில் உலக வங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று குறித்த உங்களது சந்தேகங்களும் அதற்கான விளக்கமும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பை அழுத்துக :

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.