உலகம்

மார்ச் 21க்குப் பின்னர் கொரோனா வைரஸின் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகி, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலி இன்று முதல் முறையாக சற்று ஆசுவாசம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை இன்று சனிக்கிழமை 681 இருந்த போதும், சமீபத்திய நாட்களில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதியான நோயாளிகள் தொகை குறைவாகக் காணப்பட்டதே இதற்கான காரணம்.

இன்றைய இறப்புக்களுடன் மொத்த எண்ணிக்கை 15,362 பேர் எனப் பதிவாகியுள்ள நிலையில் அதிகாரிகள், நோய் தொற்று வரைநிலைப் புள்ளியை RO -1 என மதிப்பீடு செய்துள்ளார்கள். ஆயினும் இப்புள்ளி RO - 0 வரும் போதே தொற்றின் அபாயம் நீங்கியதாகக் கொள்ள முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த நிலையை அடைவதற்கு மேலும் ஒரு மாதகாலம் ஆகலாம் என்பதனால் தற்போதுள்ள அவசரகால கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்த முடியாதிருக்கும். ஆதலால் இந்தப் புள்ளியின் சரிவுநிலைக்கு ஏதுவாக, படிப்படியாக நடைமுறை வாழ்க்கைக்கான செயற்பாடுகள் தொடங்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஆகவே பொது மக்கள் இந்த மாதத்தில் வரும் பண்டிகை, மற்றும் , விடுமுறை நாட்களை வெளியே சென்று கொண்டாடும் எண்ணத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து தினசரி அதிக நோயாளர்களால் நிறைந்திருந்த தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலிருந்து, சமீபத்திய நாட்களில் பலரும் வெளியேறி வருவது, இதுவரை நாம் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளின் மீதான நம்பிக்கையை தோற்றுவிக்கின்றது எனவும், கடந்த 24 மணி நேரத்தில் 70 க்கும் மேற்பட்டோர் ஐ.சி.யுவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், இது மிகவும் முக்கியமான செய்தி என்றும், சிவில் பாதுகாப்பு சேவைத் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், "இந்த நாட்கள் எங்கள் மருத்துவமனைகளை சுவாசிக்க அனுமதிக்கிறது. நாங்கள் அவசரகால நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைவது இதுவே முதல் முறை. ஆனால் மார்ச் 27 அன்று ஒரேநாநாளில் நாங்கள் கிட்டத்தட்ட 1,000 பேர் இழந்துவிட்டோம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அன்றைய தினம் இத்தாலி 969 இறப்புகளைப் பதிவு செய்தது. நேற்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 1,500 இறப்புகளை அமெரிக்கா அறிவிக்கும் வரை, அன்றைய இழப்புக்களே அதி கூடியவையாக இருந்தன." என்றார்.

"இத்தாலி முழுவதும் தினசரி புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்பு நான்கு சதவீதமாக குறைந்துள்ளதாயினும், அதிகாரிகள் இன்னும் வெற்றியை அறிவிக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி ஒரு வலுவான சமிக்ஞையாகும். அதை முக்கியமான கட்டத்தை நாம் வென்றுவிட்டோம் என்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று அரசாங்கத்தின் அறிவியல் கவுன்சில் தலைவர் பிராங்கோ லோகடெல்லி கூறினார்.

இது இவ்வாறிருக்க, இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், " கொரோனா வைரஸ் தாக்கத்தின் அவசரநிலையை எதிர்கொள்வதில், ஐரோப்பிய ஒற்றுமை உணரப்படவில்லை, மேலும் இழக்க நேரமில்லை. ஒற்றுமையின் வலிமையைக் காட்ட வேண்டிய தருணம் இது" கூறியுள்ளதாகத் தெரிய வருகிறது.

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.