உலகம்

கொரோனா வைரஸ் சுகாதார நெருக்கடியைத் தொடர்ந்து தனிநபர் சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள் பலர் இன்று சுவிட்சர்லாந்தில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

சுவிஸின் மத்திய கூட்டாட்சி அரசு ஐந்து பேர்களுக்கு மேல் கூடுவதை தடைசெய்திருக்கும் நிலையில் பல நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள், தலைநகர் பேர்னில் உள்ள சுதந்திர சதுக்கத்தின் கூடினர். ஆர்ப்பாட்டத்தை கலைக்க, அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் அழைக்கப்பட்டிருந்த போதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில், பல வயதானவர்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் கூட இருந்ததால், அவர்கள் மீதான வன்முறையான கட்டுப்பாடுகளைத் தவிர்த்து, அமைதியாகக் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

லாக்டவுன் தளர்வு நடவடிக்கைகள் திறம்பட பேணப் படாது விட்டால் மீண்டும் ஊரடங்கு ஆபத்து! : WHO

மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு மீறுவதாக கருதும் விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தலைநகர் பேர்னைப் போலவே, சூரிச், பாசல், மற்றும் செங்காலன் மாநிலங்களிலும் பலநூறு மக்கள் திரண்டு எதிர்ப்புக்கனைத் தெரிவித்தனர். ஆயினும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்திய அவர்கள் பின்னர் அமைதியாகக் கலைந்து சென்றதாகவும் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 8ந் திகதி வரையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக அரசு தளர்த்துவதாக அறிவித்துள்ளது. திங்களன்று, சில பள்ளிகள், கடைகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும், ஆனால் பெரிய கூட்டங்கள் மற்றும் பல பொது கட்டிடங்கள் இன்னும் பல வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்திருப்பதற்கு எதிரான மக்கள் வெளிப்பாடுகளாக இன்றைய ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தன என அறியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தவிர்க்க முடியாத வகையில் கோவிட்-19 இன் 2 ஆம் அலைத் தாக்கம் ஏற்படும் என்றும் இதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சாத்தியம் உள்ளது என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது மாற்று வழிகள் எதுவும் இல்லை என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் கூட்டமைப்பின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் மார்ட்டின் அக்கர்மன் தெரிவித்துள்ளார்.