உலகம்

ஸ்பெயினைச் சேர்ந்த 113 வயதாகும் மரியா பிரான்யாஸ் என்ற மூதாட்டி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சில வாரங்கள் தனிமைப் படுத்தப் பட்டு இருந்த நிலையில் அவர் அதில் இருந்து மீண்டு வந்து அனைவரையும் அதிசயப் பட வைத்துள்ளார்.

முதலாம் உலக மகா யுத்தத்தின் போது ஸ்பெயினுக்கு தன் குடும்பத்துடன் இவர் ஒரு படகு மூலம்இடம்பெயர்ந்திருந்தார்.

இவர் 1918 முதல் 19 வரை நீடித்து உலகை உலுக்கி மில்லியன் கணக்கான உயிர்களைக் குடித்த ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று நோய் சமயத்திலும், 1936 முதல் 39 வரை நடைபெற்ற ஸ்பெயின் உள்நாட்டுப் போரிலும் உயிர் வாழ்ந்துள்ளார். ஸ்பெயினில் தற்போது உயிர் வாழ்ந்து வரும் மிக வயதான நபராக அறியப் படும் பிரன்யாஸ் மூதாட்டி தங்கியிருந்த முதியவர் இல்லத்தில் வேறு பல முதியவர்கள் கொரோனாவுக்குப் பலியாகி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிறந்த இவர் கடந்த 20 வருடமாக ஒலோட் என்ற ஸ்பெயின் நகரில் வசித்து வந்ததுடன் கொரொனா தொற்றுக்கு ஏப்பிரலில் உள்ளாகியிருந்தார் இவரைத் தனிமைப் படுத்திப் பல வாரங்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

தான் எப்போதும் சுகாதாரமாக இருப்பதை விரும்புவது தான் தனது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என மாறாத புன்னகையுடன் ஒரு மருத்துவ ஊழியரின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளர் இவர். உலக அளவில் கோவிட்-19 தொற்றுக்களால் அதிகம் பாதிக்கப் பட்ட 2 ஆவது நாடு ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.