உலகம்

இருபத்தியாறு மாநிலங்களையும், 8.5 மில்லியன் மக்களையும் கொண்ட சுவிற்சர்லாந்தின் மத்தய கூட்டாட்சித் தலைவி சிமோனெத்தா சமோரூகா இன்ற தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

1960 மே 14 ந் திகதி சுக் நகரிலுள்ள மருத்துவமனையில் திச்சினோ மாநிலத்திலுள்ள லுகானோ மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடுத்தரக் குடும்பத்தின், நான்கு சகோதரர்களின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.

ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசவும், ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளில் எழுதும் திறனும், உயர்கல்விப் பட்டதாரியுமான இவர், பியானோ வாசிப்பதிலும் இலக்கியப் படைப்புகளை வாசிப்பதிலும் ஆர்வமுள்ளவர். கோடையில் அவர் தோட்டங்களில் வேலைகள் செய்வதையும், மலைகளில் நடைபயணம் செய்வதற்கும் ஆர்வமுள்ள இவர்
எழுத்தாளரும் சிறுகதை எழுத்தாளருமான லூகாஸ் ஹார்ட்மனை மணந்துள்ளார்.

செப்டம்பர் 22, 2010 அன்று, அவர் பெடரல் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2010 முதல் 2018 இறுதி வரை அவர் மத்திய நீதி மற்றும் காவல் துறைக்கு (எஃப்.டி.ஜே.பி) தலைமை தாங்கினார். 1 ஜனவரி 2019 முதல் சிமோனெட்டா சோமருகா சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல் தொடர்புத் துறையின் (DETEC) தலைவராக இருந்து வருகிறார். 186 வாக்குகளுடன், டிசம்பர் 11 அன்று கூட்டாட்சி சபை 2020 க்கான கூட்டமைப்பின் தலைவராக சிமோனெத்தா சோமருகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், மத்திய கூட்டாட்சிக்கு இரண்டாவது முறையாக தலைமை தாங்கும் பெருமைக்குரியவராகின்றார்.

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடிகள் நிறைந்த இக்காலத்தில் மிகச் சிறப்பாக செயலாற்றும் அவருக்கு உலகத் தலைவர்கள், உள்ளூர் தலைவர்களும், வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள். சுவிற்சர்லாந்து வாழ் புலம் பெயர் தமிழ் மக்கள் சார்பில், நாமும் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தோம் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.