உலகம்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ அண்மைய தகவல் படி உலகம் முழுதும் சுமார் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் குறித்த முக்கிய புள்ளி விபரங்களைப் பார்போம்..

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 4 498 112
மொத்த இறப்புக்கள் : 301 914
குணமடைந்தவர்கள் : 1 691 625
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 504 573
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 45 492

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 447 185 : மொத்த இறப்புக்கள் : 86 380
ஸ்பெயின் : 272 646 : 27 321
ரஷ்யா : 252 245 : 2305
பிரிட்டன் : 233 151 : 33 614
இத்தாலி : 223 096 : 31 368
பிரேசில் : 196 375 : 13 555
பிரான்ஸ் : 178 870 : 27 425
ஜேர்மனி : 174 636 : 7900
துருக்கி : 144 749 : 4007
ஈரான் : 114 533 : 6854
சீனா : 82 929 : 4633
இந்தியா: 81 990 : 2649
கனடா : 73 331 : 5468
பாகிஸ்தான் : 35 788 : 770
சுவிட்சர்லாந்து : 30 463 : 1872
ஜப்பான் : 16 049 : 678
தென்கொரியா : 10 991 : 260
இலங்கை : 925 : 9

இன்றைய புள்ளி விபரப்படி உலக அளவில் மொத்த தொற்றுக்கள் 45 இலட்சத்தை நெருங்கியும், மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்தைக் கடந்தும் உள்ளது. மொத்த தொற்றுக்களின் அடிப்படையில் இறப்புக்களின் வீதம் 6.66% ஆகவுள்ளது. டிசம்பரில் இருந்து ஒரு இலட்சம் இறப்புக்கள் ஆக ஏப்பிரல் 9 ஆம் திகதி அதாவது 3 மாதத்துக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டது. இதுவே 2 இலட்சத்தை 16 நாட்களில் அதாவது ஏப்பிரல் 25 ஆம் திகதி எட்டியிருந்தது.

மேலும் 3 இலட்சத்தை மே 14 ஆம் திகதியாகிய இன்று 19 நாட்களில் எட்டியுள்ளது. உலக அளவில் மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் மொத்த தொற்றுக்கள் 14 இலட்சத்தைக் கடந்தும், இறப்புக்கள் 86 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனியையும், பிரான்ஸையும் பின்னுக்குத் தள்ளி விட்டு பிரேசிலில் 1 இலட்சத்து 96 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை உலக அளவில் 3 இலட்சத்துக்கும் அதிகமான இறப்புக்களை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் பூமியில் மிக நீண்ட காலத்துக்கு அழியாமல் இருக்க வாய்ப்புள்ளது என உலக சுகாதாரத் தாபனம் தெரிவித்துள்ளது. உலகில் 213 நாடுகளில் இதன் தாக்கம் உண்டாகியுள்ள நிலையில் உலகின் வல்லரசுகள் முதற் கொண்டு ஏழை நாடுகள் வரை அனைத்து நாடுகளும், மிகவும் வீழ்ச்சியடைந்துள்ள தமது பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பவும், கொரோனாவின் 2 ஆவது அலைத் தொற்றை எதிர்கொள்ளவும் போராடி வருகின்றன.

இந்நிலையில் தான் உலக சுகாதார அமைப்பின் அவசரகாலத் திட்ட நிர்வாக இயக்குனர் மைக் ரயான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். தடுப்பு மருந்து இல்லாமலேயே கொரோனாவைக் கட்டுப் படுத்த பல வருடங்கள் எடுக்கும் என்ற நிலையில், தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் பட்டாலும், அதை அனைவருக்கும் வழங்கி நோய்த் தொற்றைக் கட்டுப் படுத்துவது என்பது பெரும் சவாலான விடயம் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உதாரணத்துக்கு எச் ஐ வி வைரஸ் அழிக்கப் படவில்லை. ஆனால் அந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம். ஆனால் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பில் இப்போது என்னால் எதனையும் உறுதியாகக் கூற முடியாது என்ரும் மைக் ரயான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான விளக்கமும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பை அழுத்துக..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.