உலகம்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று, அவசரநிலை குறித்த நிலைமைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த, சுவிஸ் தொற்று நோய்கள் பிரிவின் (FOPH)"நாங்கள் சரியானை பாதையில் செல்கின்றோம் " என்பதனை அனைவராலும் உணரமுடிகிறது எனக் குறிப்பிட்டார்.

FOPH இன் "தொற்று நோய்கள்" பிரிவின் தலைவர் டேனியல் கோச் , SECO இன் இயக்குநர் மேரி-கேப்ரியல் இனிச்சென்-ஃப்ளீச் ஆகியோர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுவிட்சர்லாந்தில் , கடந்த 24 மணி நேரத்தில் பத்து புதிய தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளன என்பதும், பார்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்துள்ள புள்ளி விபரங்களும், " கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் நாங்கள் சரியான பாதையில் பயணிக்கின்றோம் " என்பதை உறுதி செய்துள்ளன.

மடி கொடுத்தவன் !

"ஈஸ்டர் பண்டிகை காலத்தில் இருந்தது போன்ற அச்சநிலை இந்த நாட்களில் இல்லை என்பதை எண்ணி மகிழுங்கள். எவ்வாறாயினும், இந்த நாட்கள் ஒரு பூமரங்காக மாறுவதைத் தவிர்ப்பதற்கும், மீண்டும் ஒரு அவசரகாலத் தடைகள் பிறப்பிக்க வேண்டியதுதைத் தவிர்ப்பதற்கும், தூரம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எப்போதும் மதிக்க வேண்டும் " எனக் கூறினார் கோச்.

" தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தை விட பொது மக்கள் இன்னும் குறைவாகவே வெளியில் நடமாடுகின்றார்கள். மிதிவண்டிகளின் பயன்பாடு வளர்ந்துள்ளது. பொது போக்குவரத்தில் முகமூடிகள் - பொது போக்குவரத்தில், மற்றவர்களிடமிருந்து தூரத்தை குறைந்தது 2 மீட்டர் வைத்திருக்க முடியாவிட்டால், முகமூடிகளின் பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அது கட்டாயமில்லை. கைகளை கழுவுதல் போன்ற பிற சுகாதார விதிகள் மிக முக்கியமானவை. தூரங்கள் மதிக்கப்படுமானால், ஐந்து பேர் வரை நிகழ்வுகள் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றன. இது உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமைகிறது " எனவும் அவர் குறிப்பிட்டார்.

பதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....

இவ்வாறு கூறியவரிடம், ஏன் இரு மீட்டர் இடைவெளி எனக் கேட்கப்பட்ட போது, " சுவிற்சர்லாந்தில் அவ்வாறே பரிந்துரைக்கின்றோம். ஆனால் இது ஏனைய சில நாடுகளில் ஒரு மீட்டராகவும் உள்ளது. நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், ஐரோப்பிய நாடுகளின் வேகவீதிகளில் கூட அனுமதிக்கப்பட்டுள்ள வேகத்தின் அளவு எல்லா நாடுகளிலும் ஒன்றாக இருப்பதில்லை " எனக் குறிப்பிட்டார்.

கோடையின் வருகை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதா? எனக் கேட்டகப்பட்ட போது, " கோடையின் வருகை ஒரு காரணியாக இருக்கலாம், ஆனால் அதனை உறுதியாகச் சொல்ல முடியாது . இருப்பினும், மக்களின் நன்நடத்தையே உண்மையில் தொற்றுநோய்களின் வீழ்ச்சிக்கு உதவியது, " என்று கோச் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.