உலகம்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் சுமார் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று குறித்த முக்கிய புள்ளி விபரம் கீழே:

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 4 965 715
மொத்த இறப்புக்கள் : 323 603
குணமடைந்தவர்கள் : 1 948 944
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 693 168
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 45 079

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 564 894 : மொத்த இறப்புக்கள் : 93 136
ரஷ்யா : 299 941 : 2837
ஸ்பெயின் : 278 803 : 27 778
பிரேசில் : 262 545 : 17 509
பிரிட்டன் : 248 818 : 35 341
இத்தாலி : 226 699 : 32 169
பிரான்ஸ் : 180 809 : 28 022
ஜேர்மனி : 177 804 : 8185
துருக்கி : 151 615 : 4199
ஈரான் : 124 603 : 7119
இந்தியா : 106 468 : 3301
பெரு : 99 483 : 2914
சீனா : 82 960 : 4634
கனடா : 79 077 : 5909
பாகிஸ்தான் : 43 966 : 939
சுவிட்சர்லாந்து : 30 618 : 1891
ஜப்பான் : 16 305 : 749
தென்கொரியா : 11 078 : 263
இலங்கை : 1023 : 9

இன்றைய புள்ளி விபரப்படி உலக அளவில் மொத்த தொற்றுக்கள் 5 மில்லியனை மிகவும் நெருங்கியுள்ளதுடன், மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்து 23 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 இலட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 93 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன

உலக அளவில் 2 இலட்சத்து 62 ஆயிரம் தொற்றுக்களுடன் பிரேசில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 674 பேர் வரை பலியாகி உள்ளனர். இலங்கையில் தொற்றுக்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதேவேளை வங்கதேச மருத்துவர்கள் 4 நாட்களுக்குள் கொரோனாவின் வீரியத்தைக் குறைக்கும் மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவிட்-19 பாதித்த 60 பேருக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதன்போது அனைவரும் வெற்றிகரமாக 4 நாட்களுக்குள் பக்க விளைவுகள் ஏதுமின்றி இத்தொற்றில் இருந்து மீண்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. 4 நாட்களுக்குப் பின்னர் இவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப் பட்ட போது அவர்களுக்குத் தொற்றுக்கள் இல்லை என்ற முடிவு கிடைத்திருப்பதாகவும் குறித்த மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

இந்த மருந்தை வங்கதேசத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவர் தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. ஆனாலும் இதுவரை இந்த மருந்து குறித்த மேலதிக தகவல்களோ, அல்லது அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா என்பது குறித்தோ எந்தவித செய்தியும் மேற்குலக ஊடகங்களில் வெளிவரவில்லை.

கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான விளக்கமும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பை அழுத்துக..

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.