உலகம்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ள சுகாதாரத்துறைத் தேவைகள் காரணமாக, அடுத்த ஆண்டில் சுவிற்சர்லாந்தின் மருத்துவக் ( die Krankenkasse, cassa malati,assurance santé) காப்பீடுகள் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சுவிட்சர்லாந்தில் சுகாதார காப்பீட்டுப் பங்குகள் அதிகரிக்க வழிவகுக்கும் என சுவிஸ் சுகாதார இயக்குநர் மாநாட்டின் தலைவர் அஞ்சம் தெரிவித்துள்ளார். ஆயினும், அதிகரிப்பதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா என்பது நோய் அல்ல..!

கொரோனா தொற்றுநோய் மருத்துவமனை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் சில காலத்திற்குத் தொடரும். இதன் னாரணமாக, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு நாடு முழுவதிலிருமிருந்து பாராட்டப்பட்டாலும், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்காலத்தில் மருத்துவமனைகளில் ஏற்படும் செலவு அழுத்தங்களால் ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

வாழும் பிரபாகரன் ! : பகுதி 6

மேலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கூடுதல் பணம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில், அதிக ஊதியம் பெறும் மருத்துவர்களிடமிருந்து கேட்கப்படலாம் என்றும், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் கட்சியைச் சேர்ந்த லூகாஸ் ஏங்கல்பெர்கர் தேசியப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

மடி கொடுத்தவன் !

ஆயினும், சுவிஸ் அரசாங்கம் மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், மாநஜில அரசுப் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, செலவு அதிகரிப்புகளை சமாளிக்க ஒரு மூலோபாயத்தை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தியாகி திலீபனின் நினைவு தினமான 26ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.