உலகம்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலக அளவில் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 5 044 796
மொத்த இறப்புக்கள் : 327 411
குணமடைந்தவர்கள் : 1 997 675
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 719 710
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 45 256

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 579 387 : மொத்த இறப்புக்கள் : 94 160
ரஷ்யா : 308 705 : 2972
ஸ்பெயின் : 279 524 : 27 888
பிரேசில் : 275 382 : 18 130
பிரிட்டன் : 248 818 : 35 704
இத்தாலி : 227 364 : 32 330
பிரான்ஸ் : 181 575 : 28 132
ஜேர்மனி : 178 341 : 8227
துருக்கி : 152 587 : 4222
ஈரான் : 126 949 : 7183
இந்தியா : 112 012 : 3434
பெரு : 99 483 : 2914
சீனா : 82 965 : 4634
கனடா : 80 081 : 6027
பாகிஸ்தான் : 45 898 : 985
சுவிட்சர்லாந்து : 30 658 : 1892
ஜப்பான் : 16 367 : 768
தென்கொரியா : 11 110 : 263
இலங்கை : 1027 : 9

இன்றைய புள்ளி விபரப்படி உலக அளவில் மொத்த கொரோனா தொற்றுக்கள் 5 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பரில் இனம் காணப்பட்ட கொரோனா தொற்று 4 மாதத்துக்குப் பின் ஏப்பிரல் 2 ஆம் திகதி தான் உலக அளவில் ஒரு மில்லியனைக் கடந்தது. இதுவே ஏப்பிரல் 15 ஆம் திகதி அதாவது 13 நாட்களுக்குள் 2 மில்லியனைக் கடந்தது. 3 மில்லியனை ஏப்பிரல் 27 ஆம் திகதி 12 நாட்களுக்குள் கடந்தது. 4 மில்லியனை மே 8 ஆம் திகதி அதாவது 11 நாட்களுக்குள் எட்டியது.

தற்போது 5 மில்லியனை இன்று அதாவது மே 20 ஆம் திகதி 12 நாட்களுக்குள் எட்டியுள்ளது. உலக அளவில் மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 94 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

3 இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் ரஷ்யா உலகளவில் 2 ஆவது இடத்தில் உள்ளது. 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் பிரேசில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் 1 இலட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. பெரு நாட்டில் தொற்றுக்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தை எட்டவுள்ளது.

சமீபத்தில், 30 நாட்களுக்குள் சீனாவில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்குவதை உலக சுகாதாரத் தாபனம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் தவறினால் அதற்கான நிதியை நிரந்தரமாக நிறுத்தி விடுவோம் என்றும், உறுப்பினராகவும் தொடர மட்டோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்து WHO இற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில், அமெரிக்கா சீனா மீது அவதூறு பரப்பும் நோக்கில் செயற்படுகின்றது என்றும், தனது நாட்டில் கொரோனா பரவுவதைத் தடுக்க திறமையற்ற முறையில் செயற்பட்டுக் கொண்டு சீனா மீது பழி போடுகின்றது என்றும் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடாக இருந்து கொண்டு அதனுடன் பேரம் பேசுவது என்பது இச்சந்தர்ப்பத்தில் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றது என்றும் இது சர்வதேசக் கடமையை அமெரிக்கா மீறுவதற்கு சமம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் அதற்கான விளக்கமும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பை அழுத்துக :

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :