உலகம்

செவ்வாய்க்கிழமை சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுனானின் கியாஜியா நகரை மையமாகக் கொண்டு 5 ரிக்டர் அளவிலான ஓரளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இது பூமிக்கடியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மிக மோசமான அதிர்வு யுனான் மாகாணத்தின் 15 இற்கும் மேற்பட்ட நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பல கட்டடங்களும், வீடுகளும், வணிக நிலையங்களும் இடிந்து விழுந்து சேதமடைந்தன. பொது மக்களில் பலர் அச்சத்தால் கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். ஆனால் கட்டட இடிபாடுகளுக்குள் பல மக்கள் சிக்கிக் கொண்டனர். விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர்.

இதன் போது உயிரிழந்த 4 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டும் 24 பேர் வரை உயிருடன் மீட்கப் பட்டு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.