உலகம்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட அனைத்து விமான நிலையங்களும் ஜூன் 3 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறியவருகிறது.

ஜூன் 3 முதல் அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்படுவது சாத்தியமாகும் எனவும் அப்போது பிராந்திய மற்றும் சர்வதேசங்களுக்கான பயனங்கள் மீண்டும் அனுமதிக்கப்படும் என இத்தாலியின் போக்குவரத்து அமைச்சர் பாவுலா டி மிச்செலி தெரிவித்தார்.

இத்தாலியர்களுக்கு 500 ஈரோ போனஸ் !

இத்தாலிய அரசு அடுத்தவாரத்தில் வெளியிடும் புதிய அறிவிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும், வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தலை ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடான இத்தாலி, மார்ச் 12 ல் நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து விமான நிலையங்கள் பயணிகள் பிரயாணத்துக்காக மூடியிருந்தன.

சுவிற்சர்லாந்தில் மே 28 ந் திகதி முதல் ஆலயங்களில் பொது வழிபாடுகளை அனுமதிக்க அரசு ஆலோசித்துள்ளது : அலைன் பெர்செட்

ஆயினும் வெளிநாட்டுப் பயணிகளை வெளியேற்றவும், வெளிநாடுகளிலிருந்து இத்தாலியர்களை அழைத்து வரவும், விமானங்கள் மிலான், ரோம் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து பயணித்தன. மே 4 ந் திகதி முதல் சில உள்ளுர் சேவைகளுக்கான சிறிய விமானநிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், ஜுன் 3ந் திகதி அனைத்து விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெரும் தொற்றினால் 6 கோடி பேர் வறுமைக்குத் தள்ளப் படுவர் : உலக வங்கி

இதகைத் தொடர்ந்து, இத்தாலிய விமான நிறுவனமான அலிடாலியாவும் தனது விமானப் பயணங்களை ஜூன் மாதத்தில் 36 சதவீதம் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இத்தாலியின் உள்ளூர் சேவைகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான சேவைகளும் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படும் எனத் தெரியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.