உலகம்

சுவிற்சர்லாந்தின் மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலுகளுக்கு ஏற்பத் திறப்பதற்கும், நடத்துவதற்குமான ஆலோசனைகளை சுவிஸ் தியேட்டர்ஸ் யூனியன், சுவிஸ் தியேட்டர் மற்றும் என்டர்டெயின்மென்ட் டெக்னீஷியன்கள் சங்கம் மற்றும் சுவிஸ் அசோசியேஷன் ஆஃப் புரொஃபெஷனல் ஆர்கெஸ்ட்ராக்கள் ஒன்றினைந்து, ஆராய்ந்து, அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.

இவற்றை ஆராய்ந்து வரும் மத்திய கூட்டாட்சி அரசு, தியேட்டர்கள், சினிமாக்கள் மற்றும் கேசினோக்களை ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாயினும், அதற்கான இறுதி முடிவும் உத்தரவும், வரும் புதன்கிழமை ( மே 27 ) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் மே 28 ந் திகதி முதல் ஆலயங்களில் பொது வழிபாடுகளை அனுமதிக்க அரசு ஆலோசித்துள்ளது : அலைன் பெர்செட்

தொற்று நோய்களுக்கான மத்திய அமைப்பு (FOPH) பரிந்துரைத்த இரண்டு மீட்டர் இடைவெளி பின்பற்றப்பட்டால், அரங்கொன்றின் 25% வரை மட்டுமே மக்களால் நிரப்ப முடியும். இதனால் அரங்கின் முக்கால் பகுதி காலியாக இருக்கும். ஆயினும், மக்கள் சினிமா அரங்குகள் மற்றும் ஆடிட்டோரியங்களில் எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் உட்கார்ந்து, ஒரே திசையில் பார்த்து, கொஞ்சம் பேசுவதால், பாதுகாப்பு தூரத்தை இரண்டு மீட்டருக்கும் குறைக்கலாம். அதனால் சாதாரண எண்ணிக்கையின் ஒப்பிட்டீல் அரங்கின் 70% இருக்கைகளைப் பாவிக்கலாம். இதற்குப் மேலாக, ஒவ்வொருவரும் முகமூடியை அணிந்து கொண்டால், 100% அரங்கினையும் பாவிக்க முடியும் என ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

அம்பன் புயல் அழிவுகளை வானிருந்து பார்த்தார் மோடி - கீழே வந்தபின் கொடுத்தார் நூறு கோடி !

அனைத்து நிறுவனங்களும் பொதுவான விதிகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மற்றும் நிறுவன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் சுகாதார விதிகளுக்கு இணங்குவது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை என்றால், அதிகபட்ச பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றன.

இத்தாலியின் அனைத்து விமானநிலையங்களும் ஜூன் 3 ந் திகதி மீண்டும் திறக்கப்படுகின்றன !

இது இவ்வாறிருக்க, சுவிட்சர்லாந்தில், "சுத்தமான மற்றும் பாதுகாப்பான" சுற்றுலாக்கள் குறித்த செயற்பாடுகளில், சுவிட்சர்லாந்தில் உள்ள சுற்றுலா சங்கங்கள் ஒரு சிறப்பு சின்னத்துடன் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. ஹோட்டல்கள், உணவகங்கள், படகுகள், கேபிள் கார்கள், பொது போக்குவரத்து மற்றும் சந்திப்பு அமைப்பாளர்களுக்கான ஆறு குறிப்பிட்ட பதிப்புகளில் "சுத்தமான மற்றும் பாதுகாப்பான" லேபிள் வழங்கப்பட்டுள்ளது.

மே 24, 25 தினங்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்!

24 மணித்தியாலத்துக்குள் உலகம் முழுதும் 1 இலட்சத்துக்கும் அதிக கொரோனா தொற்று!

சுவிட்சர்லாந்தில் விருந்தினர்களின் நம்பிக்கையை பாதுகாப்பான மற்றும் தூய்மையான பயண இடமாக வெளிநாடுகளில் விளம்பரப்படுத்துவதில் இந்த சின்னம் குறிப்பாக பயன்படுத்தப்படும். இப் பிரச்சாரத்தின் பங்கேற்பாளர்களான சுவிஸ் ஹோட்டல்கள் அமைப்பு, சுவிஸ் கேபிள் கார்கள், பரா ஹோட்டெல்லரி ஸ்வீஸ், பொது போக்குவரத்து ஒன்றியம், சுவிஸ் கப்பல் நிறுவனங்களின் சங்கம் , சுவிஸ் சுற்றுலா மேலாளர்கள் சங்கம் மற்றும் காஸ்ட்ரோ சுயிஸ் ஆகியவை அடங்கும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.