உலகம்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 5 279 849
மொத்த இறப்புக்கள் : 338 676
குணமடைந்தவர்கள் : 2 138 418
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 802 755
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 44 694

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 640 961 : மொத்த இறப்புக்கள் : 97 490
ரஷ்யா : 326 448 : 3249
பிரேசில் : 319 069 : 20 541
ஸ்பெயின் : 281 904 : 28 628
பிரிட்டன் : 254 195 : 36 393
இத்தாலி : 228 658 : 32 616
பிரான்ஸ் : 182 219 : 28 289
ஜேர்மனி : 179 713 : 8352
துருக்கி : 154 500 : 4276
ஈரான் : 131 652 : 7300
இந்தியா : 124 794 : 3726
பெரு : 111 698 : 3244
சீனா : 82 971 : 4634
கனடா : 82 420 : 6245
பாகிஸ்தான் : 50 694 : 1067
சுவிட்சர்லாந்து : 30 707 : 1903
ஜப்பான் : 16 424 : 777
தென்கொரியா : 11 142 : 264
இலங்கை : 1068 : 9

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 52 இலட்சத்து 79 ஆயிரத்தைத் தாண்டியும், மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்து 38 ஆயிரத்தைத் தாண்டியும் உள்ளது. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 16 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 97 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

உலக சுகாதாரத் தாபனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்பின் பின் ஹம்சவர்தன் உரையாற்றுகையில், இனி வரும் 20 ஆண்டுகளில், உலகில் சுகாதாரம் சார்ந்த பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றார்.

மேலும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இந்தியா கொரோனா தொற்றை எதிர்கொண்டதால் அங்கு இறப்பு விகிதம் 3% வீதத்துக்குள் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான விளக்கமும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளக் கீழே இருக்கும் இணைப்பை அழுத்துக...

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.