உலகம்

வெள்ளிக்கிழமை லாகூரில் இருந்து கராச்சி நோக்கிப் புறப்பட்ட PIA எனப்படும் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸை சேர்ந்த ஏர்பஸ் 320 ரக விமானமான PK8303 கராச்சிக்கு அருகே பொது மக்கள் குடியிருப்பில் மோதி கோர விபத்தில் சிக்கியது.

இதில் குறித்த விமானத்தில் பயணித்த 99 பயணிகளில் இருவரைத் தவிர அனைத்து 97 பேரும் பலியாகி உள்ளனர்.

விமானம் மோதிய குடியிருப்பிலும் சில மக்கள் பலியாகிய போதும் இந்தப் பலி எண்ணிக்கையை பாகிஸ்தான் அரசு இதுவரை வெளியிடவில்லை. விபத்து நடந்த இடத்தில் இன்று முழுதும் புகை மண்டலமாகக் காணப்பட்டதுடன் விரைந்து வந்த பாகிஸ்தான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் பலியானவர்களது சடலங்கள் மீட்கப் பட்டும், காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப் படவும் செய்தனர். இந்த விபத்தின் போது கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டருக்குள் உள்ள மாடல் காலனியில் கட்டடங்கள் சில கடும் சேதமடைந்தன.

விசுவாச ஊழியர்களை விட்டெறிந்த விகடன் தாத்தா !

விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகளை பாகிஸ்தான் அரசும், குறித்த விமான சேவை நிறுவனமும் முடுக்கி விட்டுள்ளன. எனினும் தரையிறங்க முன்பு விமானத்தின் இரு இயந்திரங்களின் கட்டுப்பாடும் இழக்கப் பட்டதும், விமானிகளில் ஒருவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் 'மேடே, மேடே' என்று கூறியதாகத் தெரிய வருகின்றது. தற்போது இந்த மோசமான விமான விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணைய ஊடகங்களில் வெளி வந்த வண்ணம் உள்ளன.

மீட்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் பயன் படுத்தப் பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் முன்னதாக 2016 ஆமாண்டு இடம்பெற்ற PIA நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் விபத்தில் 40 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இந்நிலையில் ரமடான் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள் சமீபத்திய இந்த விபத்தில் பலியாகி இருப்பது ஏற்கனவே கொரோனா தொற்று அச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை : சோனியாகாந்தி

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.