உலகம்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 5 371 099
மொத்த இறப்புக்கள் : 342 555
குணமடைந்தவர்கள் : 2 224 360
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 804 184
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 53 570

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 656 213 : 98 222
பிரேசில் : 340 837 : 21 678
ரஷ்யா : 335 882 : 3388
ஸ்பெயின் : 282 370 : 28 678
பிரிட்டன் : 257 154 : 36 675
இத்தாலி : 229 327 : 32 735
பிரான்ஸ் : 182 219 : 28 289
ஜேர்மனி : 179 768 : 8354
துருக்கி : 155 686 : 4308
ஈரான் : 133 521 : 7359
இந்தியா : 131 423 : 3868
பெரு : 111 698 : 3244
கனடா : 83 590 : 6352
சீனா : 82 971 : 4634
பாகிஸ்தான் : 52 437 : 1101
சுவிட்சர்லாந்து : 30 725 : 1905
ஜப்பான் : 16 513 : 796
தென்கொரியா: 11 165 : 266
இலங்கை : 1089 : 9

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 53 இலட்சத்தைக் கடந்தும், மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்து 42 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 16 இலட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 98 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

3 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் பிரேசில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரேசிலில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளது. இதேவேளை உலகளவிலான கொரோனா லாக்டவுன் காரணமாக 68 நாடுகளைச் சேர்ந்த 8 கோடி குழந்தைகளுக்கு அத்தியாவசிய தடுப்பூசி போடப் படும் திட்டம் நிறைவேற்றப் படாது போவதால் இக்குழந்தைகள் பாதிக்கப் படும் அபாயத்தில் உள்ளனர் என உலக சுகாதாரத் தாபனம் கவலை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் அதற்கான விளக்கமும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பை அழுத்துக..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தால், எம்மைப் புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியலமைப்பினை அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.