உலகம்

ரமடான் நோன்பு துறப்புக்குப் பின்னதான Eid Al-Fitr பண்டிகை நாளை ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப் படும் என பிறை அவதானிப்புக்குப் பின் தெரிவித்த சவுதி அரசு சனிக்கிழமை நோன்பின் இறுதி நாள் என்றும் கூறியுள்ளது.

இதனை ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் கட்டார், ஜோர்டான் ஆகிய நாடுகளும் உறுதிப் படுத்தியுள்ளன.

ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஈத் பண்டிகை அரபு ராச்சியத்தில் வித்தியாசமான அனுசரிக்கப் படுகின்றது. மே 23 முதல் 27 வரை அங்கு 24 மணித்தியால லாக்டவுன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரமலான் பண்டிகையின் போது தொழுகைக்காக மசூதிகள் திறக்கப் படாது எனவும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அறிவிப்பு விடுத்துள்ளன.

மேலும் குறிப்பிட்ட நேரங்களில் முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும் என சவுதி அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆயினும் இத்தருணத்தில் மெக்கா மற்றும் மெதினா போன்ற புனித மசூதிகளில் இமாம்கள் மட்டும் தொழுகை நடத்துவர் எனவும் தெரிய வருகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :