உலகம்

கொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் இது தொடர்பில் சீனாவுக்குள்ளே சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா வைரஸை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதிய சர்வதேச அரசியலால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே புதிய பனிப்போர் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில், கொரோனா விவகாரத்தில் சீனா மீது பழி சுமத்துவதன் மூலம் அமெரிக்கா தனது மதிப்பைத் தானே கெடுத்துக் கொள்கின்றது என்றும் தெரிவித்தார்.

தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ள சீனா அரசின் முன்னேற்றத்தை எந்த நாட்டாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சீனா இடையே போர்ப் பதற்றத்தை அதிகரிக்கும் விதத்தில் அமெரிக்கா நடுவானில் விமானங்களை இடை நிறுத்தி அழிக்கக் கூடிய நவீன லேசர் ஆயுதத்தைப் பரிசோதித்துள்ளது. மேலும் இவ்விரு நாடுகளும் தென் சீனக் கடல் எல்லையில் மோசமான சண்டையில் ஈடுபடத் தயாராகி வருவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா அணுவாயுத சோதனைகளை செய்வதற்கான திட்டங்களையும் வகுத்து வருகின்றது. பசிபிக் கடலில் அமெரிக்க கடற்படை மிக ரகசியமாகப் பரிசோதித்திருக்கும் அதி நவீன லேசர் ஆயுதம் தாழ்வாகப் பறக்கக் கூடிய விமானங்களைத் தாக்கி அழிக்கக் கூடியதாகும். மறுபுறம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடைப்பட்ட லடாக் எல்லையில் சீனா என்றும் இல்லாதவாறு புதிதாக நிறையப் படையினரைக் குவித்து வருவது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 மாதங்களில் லடாக் எல்லையில் சீனா 140 முறை அத்துமீறி உள்ளதாகவும் முக்கியமாக இப்பகுதியின் பாங்காங் டிசோ என்ற இடத்திலுள்ள நதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதாகவும் இந்தியா சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது இந்த லடாக் பகுதியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான பாசறைகளை அமைத்து அதி நவீன ஆயுதங்களுடன் ஆயிரத்துக்கும் அதிகமான படையினரை சீன அரசு குவித்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. இதை விட நூற்றுக்கும் அதிகமான பதுங்கு குழிகளையும் இப்பகுதியில் சீனா அமைத்து வருகின்றது.

கடந்த வாரம் சிக்கிம் எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது லடாக்கில் சீனாவுக்கு இணையாக இந்தியாவும் படைகளைக் குவிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு இன்னமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.