உலகம்

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

இந்த எலும்புக் கூடுகள் மெமொத் எனப்படும் இராட்சதக் கொம்புகளுடைய யானைகள், காட்டெருமை, ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களுடைய எலும்புக் கூடுகள் என்று கூறப்படுகின்றன. மெக்ஸிக்கோவில் ஸ்பானியாவின் காலனியாதிக்கத்துக்கு முந்தைய நாகரிகத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தான் இந்த ஆய்வு முன்னெடுக்கப் பட்டது.

ஆனால் தற்போதோ இறுதிப் பனியுகத்தின் விலங்குகளின் எலும்புக்கூடுகள் இவர்களுக்குக் கிடைத்திருப்பது இவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் பூமியின் இக்காலப் பகுதியில் விலங்குகளின் தோற்றம், பரிணாமம் மற்றும் அவை அழிந்தமைக்கான காரணம் போன்றவற்றை அறிய முற்படும் கல்விக்கு இப்புதிய கண்டு பிடிப்புக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.