உலகம்

தெற்கு இந்து சமுத்திரத்தில் வலுப்பெற்று வரும் சைக்கிளோன் மங்க்காவின் தீவிரத்தால் ஏற்பட்டுள்ள புயல் பொறிமுறை ஒன்று மேற்கு அவுஸ்திரேலியாவை மோசமாகத் தாக்கி வருகின்றது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பின் மேற்கு அவுஸ்திரேலியாவை மிக வலிமையாகத் தாக்கி வரும் புயல் இதுவாகும்.

மணித்தியாலத்துக்கு 60 மைலுக்கும் அதிக வேகத்தில் வீசி வரும் இந்தப் புயலின் காரணமாக மேற்கு அவுஸ்திரேலியாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கும், வணிக நிலையங்களுக்கும் மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் இந்தப் புயல் மிகவும் வலுப்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அனர்த்த கால சேவைப் பிரிவின் துணை கமிசனர் ஜொன் புரோம்ஹால் என்பவர் இந்தப் புயல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

'வழமையாக இப்பகுதியைத் தாக்க வரும் புயல்கள் தென்மேற்கு திசையில் இருந்து தான் வரும். ஆனால் இப்புயலோ வடமேற்குத் திசையில் இருந்து வந்துள்ளது. எனவே வழமையான புயல்களை விட இதன் போது சேதாரம் அதிகமாக இருக்கும். பொது மக்கள் தமது உடமைகளையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும்!'

அவுஸ்திரேலிய வானியல் திணைக்களத்தின் அதிகாரி ஜேம்ஸ் ஆஷ்லே கூறுகையில், இந்த புயல் மிகவும் வீரியமாகவும், சிக்கலான கட்டமைப்பைக் கொண்டதாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை வீசிய புயலினால் மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகர் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.