உலகம்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 5 742 220
மொத்த இறப்புக்கள் : 354 803
குணமடைந்தவர்கள் : 2 470 547
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 916 870
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 53 080

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 735 764 : மொத்த இறப்புக்கள் : 101 392
பிரேசில் : 396 166 : 24 746
ரஷ்யா : 370 680 : 3968
ஸ்பெயின் : 283 339 : 27 117
பிரிட்டன் : 267 240 : 37 460
இத்தாலி : 231 139 : 33 072
பிரான்ஸ் : 182 722 : 28 530
ஜேர்மனி : 181 719 : 8520
துருக்கி : 159 797 : 4431
இந்தியா : 158 042 : 4534
ஈரான் : 141 591 : 7564
பெரு : 129 751 : 3788
கனடா : 87 481 : 6760
சீனா : 82 993 : 4634
பாகிஸ்தான் : 59 151 : 1225
சுவிட்சர்லாந்து : 30 776 : 1917
ஜப்பான் : 16 623 : 846
தென்கொரியா : 11 265 : 269
இலங்கை : 1453 : 10

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 57 இலட்சத்து 42 ஆயிரத்தைக் கடந்தும், மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்து 54 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளது. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் மொத்தம் 17 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

உலகளவில் சீனாவை அடுத்து தங்கள் நாட்டில் கொரோனாவை முற்றாகத் தடுத்து விட்டோம் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இதுவரை 1500 பேருக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. இதில் 21 பேர் தான் பலியாகி இருந்தனர். தொற்று அறியப் பட்ட பின்னர் உடனடியாக ஊரடங்கு பிறப்பித்தது நியூசிலாந்து. இந்த ஊரடங்கு விதிகளைப் பொது மக்கள் மதித்துப் பின்பற்றினர்.

இதன் விளைவாக கொரோனா ஒரு சமூகத் தொற்றாக அங்கு மாறுவது முற்றிலும் தடுக்கப் பட்டதுடன் மே மாதத்தில் பெரும்பாலும் புதிய தொற்றுக்கள் ஏற்படவே இல்லை. நியூசிலாந்தில் தற்போது கொரோனாவுக்காக ஒருவர் மாத்திரமே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து நியூசிலாந்தில் தற்போது ஊரடங்குக் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப் பட்டு வருகின்றது.

நியூசிலாந்து தனது எல்லைகளைத் திறக்கக் கூடத் திட்டமிட்டு வருகின்றது. எனினும் அவசரப் பட்டு இந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடனே தளர்த்துவதால் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வெளிநாட்டவரால் ஏற்படலாம் என தொற்று நோய் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். மறுபுறம் ஐரோப்பிய நாடுகள் பல ஜூன் மத்திக்குப் பின்பு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பெருமளவில் தளர்த்த ஆலோசித்து வருகின்றன.

கோவிட்-19 தொற்று தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான விளக்கமும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்கவழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பை அழுத்துக...

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.