உலகம்

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

1997 ஆமாண்டு முதல் சீன ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்து வரும் முன்னால் பிரிட்டிஷ் காலனியான ஹாங்கொங்கிடம் இனிமேலும் திறந்த வர்த்தகத்தையோ அல்லது நிதியுதவியையோ வழங்குவதற்கு எதிராக அமெரிக்க சட்டம் இயற்றுபவர்கள் ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். இதுதவிர ஹாங்கொங் அரசும் இனிமேல் 1997 ஆமாண்டுக்கு முந்தைய காலத்தில் அமெரிக்க சட்டங்களுக்கு ஏற்ப இருந்ததைப் போன்ற வர்த்தக உறவை எதிர்பார்க்கக் கூடாது என்றும் மைக் பொம்பெயோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக ஹாங்கொங் மீது சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டங்களைப் பிரயோகித்து வருவதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டைத் தான் அமெரிக்காவும் வேறு சில மேற்குலக நாடுகளும் கொண்டுள்ளன. இந்நிலையில் பொம்பேயோவின் இந்த அறிக்கையின் பின்னதான டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு ஹாங்கொங் மீதான எந்தவொரு குறிப்பிட்ட சலுகைகளையும் ரத்து செய்யுமா என்பது குறித்த கேள்வி எழவே செய்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.