உலகம்

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்பும் வகையில், சுவிஸ் வாசிகளுக்கு 200 பிராங்குகளுக்கான " கோடை விடுமுறை" காசோலைகளை வழங்கும் திட்டம் ஒன்று அரசாங்கத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

" நாடுகளுக்கான பயண சுதந்திரம் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்படும் பாரிய சரிவு, உள்ளூர் வாடிக்கையாளர்களால் மாற்றப்பட வேண்டும். சுவிஸ் மக்கள் தங்கள் விடுமுறை நாட்களை தங்கள் நாட்டில் கழிக்க வலுவான சலுகைகள் தேவை" எனக் கூறும், சுவிற்சர்லாந்தின் தேசிய கவுன்சிலின் உறுப்பினர் லோச்சர் பெங்குவரல் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இத் திட்டத்தின்படி, ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் உள் நாட்டின் சுற்றுலாத் துறையில் செலவழிக்க 200 பிராங்க் வவுச்சரை வழங்கும். இந்த வவுச்சர்களை ஹோட்டல்களில் அல்லது சுற்றுலா தலங்களின் அமைப்புக்களுடன் உணவகங்கள் மற்றும் ஓய்வு நேர வதிவிடங்கள் என்பவற்றில் பயன்படுத்தலாம். இது ஒரு சாதாரண கோடையாக இருக்காது . கோடைகாலத்திற்காக முன்மொழியக்கப்படும் இந்த திட்டத்திற்கான, வவுச்சர்கள் குளிர்காலத்திலும் செல்லுபடியாகும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உருவாக்கிய எஸ்பி தேசிய கவுன்சிலர் சாண்ட்ரா லோச்சர் பெங்குவரல், உள்நாட்டில் விடுமுறைகளை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.

சுவிற்சர்லாந்து அரசு கொரோனா வைரஸ் தடுப்புக்காக விதித்த அவசரகால நிலையை ஜுன் 19 ந் திகதியுடன் நீக்குகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.