உலகம்

புதன்கிழமை விண்ணில் உள்ள ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு நாசாவின் இரு வீரர்களை ஏந்தியவாறு SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட்டின் மூலம் Crew Dragon என்ற அதிநவீன விண் ஓடம் செலுத்தப் படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் கால நிலை சீர்கேட்டால் இதன் பயணம் சனிக்கிழமை ஒத்திப் போடப் பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Demo-2 என்ற இந்த மிஷன் ஆனது Launch America என்றும் அழைக்கப் படுவதுடன் சனிக்கிழமை அமெரிக்க நேரப்படி மாலை 3.22 மணிக்கு இது செயற்படுத்தப் படும் என நாசாவின் அதிகாரப்பூர்வ வலைத் தளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இதற்கான கவுண்ட் டவுனையும், இந்தப் பயணத்தின் நேரடி ஒளிபரப்பையும் குறித்த நாசாவின் வலைத் தளத்தில் நீங்கள் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கான இணைப்பு : nasa.gov

மே 28 ஆம் திகதி இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப் பட்டிருந்ததாக எமது 4தமிழ்மீடியா தளத்தின் செய்தியில் முன்னதாகத் தவறுதலாகக் குறிப்பிடப் பட்டிருந்ததற்கு வருந்துகின்றோம்..

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.