உலகம்

ரஷ்யாவின் மேற்பகுதியில் ஆர்க்டிக் துருவத்துக்கு கீழே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சைபீரிய சமவெளி மற்றும் அதன் காடுகளில் முக்கியமாக கட்டாங்கா என்ற பகுதியில் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீ பரவி வருகின்றது.

இதனால் அங்கு அதிகபட்சமாக 78 டிகிரி வரை கூடப் பதிவாகி இருந்தது. சராசரி வெப்ப நிலை 32 டிகிரிக்கும் அதிகமாகும்.

இதனால் வடதுருவத்தில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவது ஊக்குவிக்கப் படுகிறது என்றும் புவி வெப்பமயமாவதை இது அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. பூமியின் துருவப் பகுதிகளில் அதிகளவு பனிப்பாறைகள் உருகுவது கடல் நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்து இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சைபீரியாவில் ஒவ்வொரு வருடமும் கோடைக் காலத்தில் ஏற்பட்டு வரும் இந்த உலகின் மிக மோசமான காட்டுத் தீயின் அம்சங்களைப் புரிந்து கொள்வது விஞ்ஞானிகளுக்கு சிரமமான ஒன்றாகவே உள்ளது. 2019 ஆமாண்டு ஏற்பட்ட சைபீரிய காட்டுத் தீயில் 30 இலட்சம் ஹெக்டேர்கள் காடு எரிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.