உலகம்

அமெரிக்காவில் கல்வி பயில சீன மாணவர்களுக்குத் தடை விதித்துள்ளார் டிரம்ப். இது குறித்து உத்தரவு பிறப்பித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் இவ்வாறு தெரிவித்தார்.

'அமெரிக்காவில் பயிலும் தனது முதுகலை மாணவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் சீன அரசு அறிவுத் திருடர்களாகப் பயன்படுத்துகின்றது. இவர்கள் மூலம் அமெரிக்க நவீன தொழிநுட்பங்களைத் திருடி தனது இராணுவத்தை நவீனப்படுத்த சீனா திட்டமிட்டு செயலாற்றி வந்துள்ளது. எனவே தான் சீன மாணவர்கள் இனியும் அமெரிக்காவில் கல்வி பயிலத் தடை விதிக்கப் படுகின்றது.'

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பை சீன மாணவர்களது உரிமையையும், சீன இறையாணமையையும் பறிக்கும் செயல் என சீனா விசனம் தெரிவித்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.