உலகம்

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

2020 ல் அதே அமெரிக்க மண்ணில் "I can't breath.." 'என்னால் மூச்சு விட முடியவில்லை..' எனச் சொல்லியபோதே ஒரு கறுப்பினத்தவனின் மூச்சு நிறுத்தப்ட்டிருக்கிறது. இந்தத் தொடர்ச்சி ஏதேச்சையானதாகவும் இருக்கலாம். ஆனால் உலகின் போக்கிற்கான ஒரு ஆடியாகவும் காணலாம்.

ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற 46 வயதான கறுப்பினத்தவர், மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட , 8 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகளில் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை New York Times செய்தி நிறுவனம் கானொளி ஆதாரங்களுடனும், குரல் பதிவுகளுடனும், நிறுவியுள்ளது.

ஜார்ஜ் ஃபிலாய்டின் உடலில் பிரேத பரிசோதனை செய்த மரணவிசாரணை அதிகாரி, போலீஸ்காரர்கள் "அவரது கழுத்தில் ஏற்படுத்திய அழுத்தத்தால் இருதயம் செயலிழந்தது காரணமாக அவர் இறந்துள்ளார். அதுவே அவரது மரணத்திற்கு காரணம்" எனவே அது ஒரு "கொலை" என முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்தக் கொலையை செய்த காவல்துறைக் காவலர்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் பல பதிவாகியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபர் எதுவித எதிர்ப்பும் காட்டவும் இல்லை, தனது உடல்நிலை குறித்து அறிவித்த போதும், அலட்சியமாக இருந்த காவலர்களின் நோக்கம், உண்மையில் அவரைக் கைது செய்வதுதானா? என ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. மனிதம் மரித்ததா..?

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இல்லை; இன்னமும் மனிதம் மறைந்துவிடவில்லை என்பதற்கான காட்சிகள் அமெரிக்காவில் அரங்கேறுகின்றன. அமெரிக்கத் தலைவரின் வெள்ளைமாளிகை இன நிற பேதற்ற மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தலைவர் டிரம்ப் நிலக்கீழ் அறையில் பதுங்கவைக்கப்படுகின்றார். ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான வழிவகைகளைத் தேடுகின்றார்.
அராஜகவாதிகளின் அசரீரியான "தீவிரவாதிகள்" எனக் கூக்குரலிட்டு, நாட்டின் சொந்த மக்களையே சுட்டுக் கொல்ல உத்தரவிடப் போவதாக எச்சரிக்கிறார். "டொனால்ட் டிரம்ப் அமெரிக்க இராணுவத்தை அமெரிக்க மக்களுக்கு எதிராக பயன்படுத்த விரும்புகிறார்" எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன்.

அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பாவிலும் இந்தக் கொலைக்கு எதிரான கண்டனங்கள் எழத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அரசியல் பொருளாதாரம் சார் நலன்கள் மிகுந்த சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச்சில் நேற்று 1000 த்துக்கும் அதிகமான மக்கள் இந்தக் கொலைக்கு எதிரான கண்டனங்களுடனும், இனப்பாகுபாட்டிற்கு எதிரான கோசங்களுடனும் கூடினர்.

கொரோனா வைரஸ் தொற்றின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் 300 பேருக்கு மேல் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் சேரமுடியாது என்றிருந்த நிலையில், நேற்றைய தினம், சூரிச்சின் மையப்பகுதிகளில், பெருமளவில் மக்கள் திரண்டனர். சமூக இடைவெளி மற்றும் தொற்றுக்கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அறிவுறுத்தல்களுடன் மட்டும் காவல்துறை தனது கடமைகளை மட்டுப்படுத்தியது. ஆர்ப்பாட்டங்கள் அசம்பாவிதங்கள், வன்முறைகளற்று, நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அதிகளவில் இளைஞர்களும், குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஜார்ஜ் ஃபிலாய்ட் டின் கடைசி நிமிடங்கள்.- New York Timesன் கானொளி ஆய்வு

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.