உலகம்

சுவிற்சர்லாந்துடனான எல்லையை திட்டமிட்டதை விட ஒரு வாரம் முன்னதாகவே திறப்பதாக ஆஸ்திரியா நேற்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட எல்லைகளை எதிர்வரும் 15 திகதி மீளத் திறக்கவுள்ளதாக ஆஸ்திரியா அறிவித்திருந்தது.

இந் நிலையில் வைரஸ் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு அண்டை நாடான இத்தாலி தவிர, ஆஸ்திரியாவின் அண்டை நாடுகளுக்கான எல்லை எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூன் 8) திறக்கப்படும் என்று ஆஸ்திரிய அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்தது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, லிச்சென்ஸ்டீன், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, செக் குடியரசு மற்றும் ஹங்கேரியுடனான எல்லைகள் ஜூன் 8 ஆம் தேதி திறக்கப்படும் - இது 15 ஆம் தேதி நடைபெறவிருந்த திட்டமிடப்பட்ட திறப்பை விட ஒரு வாரம் முன்னதாக.

8ந் திகதியின் பின்னதாக சுவிஸ் குடியிருப்பாளர்கள் ஆஸ்திரியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆயினும், முதலில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஜூன் 15 ஆம் திகதி வரை ஆஸ்திரியர்களுக்கு பரஸ்பர அனுமதிகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வைரஸ் தொற்றிக் தாகக்ம் குறைந்ததாக அறிகையில், இத்தாலியுடனான எல்லை மீண்டும் திறக்கப்படும் எனவும் ஆஸ்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.