உலகம்

மே 24 ஆம் திகதி அமெரிக்காவின் மின்னாபோலிஸ் பகுதியில் ஜோர்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர், வெள்ளையின போலிசாரால் கைது செய்யப் பட்ட போது கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டார்.

இது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியானதால் கொந்தளித்த அமெரிக்க கருப்பின மக்களுடன் சிறுபான்மை இனத்தவர்களும் ஏன் ஏனைய அமெரிக்க குடிமக்களும் கூட இணைந்து அங்கு வரலாறு காணாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். பல இடங்களில் கலவரமும் வன்முறையும் முன்பு ஏற்பட்டு போலிஸ் நிலையம், போலிஸ் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப் பட்டன. வன்முறை வெடித்ததால் போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்தனர். சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டனில் உள்ள அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை இலட்சக் கணக்கான மக்களால் முற்றுகையிடப் பட்டது. இதனை அடுத்து தேசியப் பாதுகாப்புப் படை வரவழைக்கப் பட்டதுடன் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் உள்ளே இருக்கும் மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழிக்கும் செல்ல நேர்ந்தது.

கடந்த ஒரு வாரத்தில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப் பட்ட போதும் தற்போது அங்கு ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாகவே முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. அமெரிக்க மண்ணில் மிக மோசமான நிலை ஏற்பட்டால் தவிர அங்கு உள்நாட்டுக்குள் இராணுவத்தைக் கொண்டு வரும் Insurrection Act என்ற சட்டத்தை அதிபர் பயன்படுத்த முடியாது. ஆனால் அதிபர் டிரம்போ பிடிவாதமாக போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வாஷிங்டன் உள்ளே இராணுவத்தை வரவழைக்க உத்தரவிட்டார்.

இதனால் சுமார் 700 இராணுவ வீரர்கள் விமானம் மூலம் வேகமாக வாஷிங்டன் வந்தனர். உள்ளே களமிறங்கிய அவர்கள் அதிபருடன் கலந்தாலோசித்து 30 நிமிடத்தில் மீண்டும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனுக்குத் திரும்பியுள்ளனர். இந்தத் திடீர் முடிவுக்கு காரணம் அதிபர் டிரம்பின் உத்தரவுடனும் வாஷிங்டனின் தற்போதைய நிலையையும் கருத்தில் கொண்டதன் பின் அவருடன் பெண்டகனுக்கு ஏற்பட்ட உடன்பாடின்மையே என்று தெரிய வருகின்றது.

பெண்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் வெளிப்படையாக இந்த எதிர்ப்பைத் தெரிவித்தது அதிபர் டிரம்பை நிலைகுலையச் செய்துள்ளது. மார்க் எஸ்பர் முன்பு பல தடவை அமெரிக்க அதிபர் டிரம்பை ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.