உலகம்

இந்தியாவை ஒரு சிறு கூட்டம் என்றும் சீனாவுக்கு எதிராக அதனால் செயற்பட முடியாது என்றும் இந்தியாவை ஜி7 நாடுகள் குழுவில் சேர்க்கத் திட்டமிட்டு வரும் அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேளையில் சீனா தெரிவித்துள்ளது.

இது இந்தியாவை சீண்டும் முகமாக உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் பகை அதிகரித்துள்ளது.

பெரிய அளவிலான சுற்றுச்சூழல் நிறுவல்களின் முன்னோடி : கிறிஸ்டோ

இதனால் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அணி சேருவதை விரும்பும் அமெரிக்கா அதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு நகர்வாக ரஷ்யா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஜி7 இல் குழுவில் இணைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். மிகவும் பழமையான ஜி7 அணி நாடுகளின் குழுவில் ஏற்கனவே கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இருந்து வருகின்றன.

முகக்கவசங்களை பொது இடங்களில் அணியுங்கள் : WHO புதிய அறிவுறுத்து

இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளது தான் சீனாவின் கோபத்தைத் தூண்டி விட்டுள்ளது. மறுபுறம் ஜூன் 16 ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் விமானங்களுக்குத் தடை விதிக்கப் படும் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிபர் டிரம்ப் இது தொடர்பான முடிவை விரைவில் எடுப்பார் என்றும் தெரிய வருகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.