உலகம்

உலக சுகாதார அமைப்பு (WHO) முகக்கவசங்கள் குறித்த தனது ஆலோசனையை மாற்றியுள்ளது, கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் இனி கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று கடந்தாண்டு பரவியது முதல் 6.7 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகளாகவும் கிட்டத்தட்ட 400,000 இறப்புகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று நீர்த்துளிகளால் பரவல் அடைவதை முகக்கவசங்களே தடுக்கின்றன. ஏற்கனவே சில நாடுகளில் முகக்கவசங்கள் அணிவதை பரிந்துரைத்துள்ளன.

ஆரோக்கியமான மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று WHO முன்பு வாதிட்டது. ஆனால் கோவிட் -19 தொடர்பான WHO அமைப்பின் தொழில்நுட்ப முன்னணி நிபுணர் மக்கள் துணியிலான முகக்கவசங்கள் அதாவது மருத்துவமற்ற முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.

தற்போது உலக சுகாதார அமைப்பு சமீபத்திய வாரங்களின் ஆய்வுகள் மூலமும் அதன் புதிய வழிகாட்டுதல் படி "பொது மக்கள் முகக்கவசங்களை பொது இடங்களில் அணிய ஊக்குவிக்க தாங்கள் அரசாங்கங்களுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், முகக்கவசங்கள் கொரோனா பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்கப் பயன்படுத்தக்கூடிய பலவிதமான கருவிகளில் ஒன்றாகுமே தவிர அவை மக்களுக்கு தவறான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.