உலகம்

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

ஆயினும் தடுப்பூசி பாவனைக்கு வரும் போது, பொது மக்கள் நோய்த்தடுப்பு மருந்தினைப் பாவிப்பதற்கு கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஏப்ரல் மாதத்தில், சுவிஸ் சுகாதார மந்திரி அலைன் பெர்செட் "சுவிஸ் சட்டம் ஒருவரை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக தடுப்பூசி போட கட்டாயப்படுத்த அனுமதிக்காது" என்று கூறியிருந்தார். இந்த நிலைப்பாட்டை நொசெத்தல் பல்கலைக்கழகத்தின் சுகாதார சட்ட நிறுவனத்தின் துணை இயக்குனர் டொமினிக் ஸ்ப்ரூமண்ட் மீண்டும் வலியுறுத்துகிறார்.

இந்த வாரம் ஆர்.டி.எஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பேசிய ஸ்ப்ரூமண்ட் " தடுப்பூசி கட்டாயமாக இருக்கும் ஆனால் கட்டாயமானது எனச் சொல்வது, அனைவருக்குமான கட்டாயப்படுத்தல் என்று அர்த்தமல்ல ” என்றார்.

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

அவர் மேவும் கூறுகையில், " சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் சில வேலைகளில் உள்ளவர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்து கட்டாயமாக இருக்கும். ஆனால் மற்றவர்களைத் தடுப்பூசி போட கட்டாயப்படுத்த முடியாது” என்று அவர் விளக்கினார்.

" இருப்பினும், தடுப்பூசி மற்றொரு தொற்றுநோயின் அபாயத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும்" என ஸ்ப்ரூமண்ட் சுட்டிக்காட்டினார்.

சுவிட்சர்லாந்தில் ஆன்டி-வாக்ஸ்சர்ஸ் என அழைக்கப்படும் நோய்த்தடுப்பு மருந்துகளை எதிர்ப்பவர்கள், இந்தச் செயற்பாட்டினை எதிர்ப்பார்கள் என எதிர்பார்க்க்கும் அவர்,
" சுவிட்சர்லாந்தில் கோவிட் -19 வைரஸ் தொற்று, குறைந்தது 31,000 பேரைப் பாதித்தது.மற்றும் 1,110 இறப்புகள் ஏற்பட்டது. இதன் பின்னரும் தடுப்பூசிக்கான எதிர்ப்பு மிகவும் சுயநலமானது" என்று அவர் கூறினார்.

"தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு சுவிட்சர்லாந்து உட்பட மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் பரவலாக இருந்தது என்பதை இந்த மக்கள் மறந்து விட்டார்கள். கடுமையான தொற்று நோய்களின் விளைவுகளை மறந்துவிட்டார்கள்" எனவும் அவர் கூறினார்.

ஆனால் " தடுப்பூசி கிடைக்கும்போது சர்ச்சை எழுந்தால், நாங்கள் எப்போதும் நம் நாட்டில் செய்ததைப் போலவே இந்த பிரச்சினையையும் நடைமுறையில் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் ”என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலென்பெர்செட் ஏப்ரல் மாதத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஜூன் 6 முதல், ஆர்ப்பாட்டங்கள், வர்த்தக கண்காட்சிகள், தனியார் நிகழ்வுகள் மற்றும் விழாக்கள், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படத் திரையிடல்களுக்கு 300 பேர் கொண்ட குழுக்கள் அனுமதிக்கப்படடலாம். இருப்பினும் இந்த நிகழ்வுகளில் உள்ளவர்கள் எல்லா நேரங்களிலும் இரண்டு மீட்டர் தூரத்தை வைத்திருக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் வைரஸின் பரவலைக் குறைக்க அவர்கள் எவ்வாறு திட்டமிடுகிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ஜூன் 8 முதல் மீண்டும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்லலாம். சுவிட்சர்லாந்தின் உயர்மட்ட கால்பந்து போட்டி - சுவிஸ் சூப்பர் லீக் - ஜூன் 8 முதல் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.

ஜூலை முதல் விளையாட்டு நிகழ்வுகளில் 1,000 பேர் கொண்ட குழுக்கள் அனுமதிக்கப்படும், இருப்பினும் சமூக தொலைதூர தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அவர்கள் எவ்வாறு உறுதி செய்வார்கள் என்பதற்கான அறிகுறிகளை வழங்க வேண்டும். ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்சிற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் நீக்கப்படும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.