உலகம்

சமீபத்தில் 2018 ஆமாண்டு தாபிக்கப் பட்டு கொரோனா பரவலை அடுத்துப் பராமரிக்கப் படாது இருந்த கொரிய தேசங்களுக்கிடையேயான தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடி வைத்து தகர்த்திருந்தது.

இதை அடுத்து இரு நாட்டு எல்லைப் பகுதியில் தென்கொரியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது இராணுவ டாங்கிகளைக் குவித்துள்ளது.

மேலும் வடகொரியா அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டால் தமது தரப்பில் பதிலடி மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்றும் தென்கொரியா எச்சரித்துள்ளது. சமீபத்தில் தான் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் இன் சகோதரி கிம் ஜோ ஜோங் தென்கொரியா எல்லை மீறுவதாகவும் இதனால் தங்கள் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பைத் தான் அளித்திருப்பதாகவும் தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது தென்கொரியாவுடனான நல்லிணக்கத்தை முற்றிலும் தகர்க்கும் விதத்தில் எல்லைப் பகுதிகளில் இராணுவ வீரர்களை அனுப்பவிருப்பதாக வடகொரியா மீண்டும் அறிவித்துள்ளது. எல்லையில் இராணுவ ஒத்திகை மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதானமாக தென்கொரியா எல்லைக்கு மிக அருகே இருக்கும் டயமண்ட் மலைப் பகுதி, கேசாங் தொழிற்பூங்கா போன்ற பகுதிகளில் படைப் பிரிவுகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் வடகொரிய இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.