உலகம்

ஐரோப்பாவில், கொரோனா வைரஸின் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகி, அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடு இத்தாலி. அதன் தற்போதைய நிலை என்ன? இத்தாலி கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அறிவித்த பெரும்பாலான கட்டுப்பாடுகளைத் தற்போது நீக்கியுள்ளது.

ஆனால் இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் ஆபத்து மறைந்துவிடவில்லை என்று எச்சரிக்கின்றனர். உண்மையில் இத்தாலியின் தற்போதைய நிலைமை என்ன அறிய விரும்பும் அனைவர்க்கும் இந்த வேறுபாடான கருத்துக்கள் குழப்பமானவையாகவே இருக்கும்.

மே 4ம் திகதி இத்தாலி அதன் கண்டிப்பான நாடு தழுவிய கட்டுப்பாடுகளின் தளர்வுகளைப் பட்டியலிடத் தொடங்கியபோது, ​​விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது, வைரஸ் தொற்றுக்களின் பரவலைத் தூண்டுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது.

இந்த அறிவிப்பும் தளர்களும் நடைமுறைக்கு வந்து, ஆறு வாரங்கள் கழித்துள்ள நிலையில், தொற்றுக்களில் பெரிய தாக்கம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆயினும், நாடாளாவிய ரீதியில், தினசரி நூற்றுக்கணக்கான புதிய தொற்றுநோய் அறிவிப்புக்களும், டஜன் கணக்கான புதிய இறப்புகளும் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டு வருவதால், வைரஸ் தொற்றின் ஆபத்து இன்னும் உள்ளது என்று அதிகாரிகள் நினைவூட்டுகிறார்கள்.

இத்தாலியின் சிவில் பாதுகாப்புத் துறையின் சமீபத்திய வைரஸின் பரவல் முன்னேற்றம் குறித்த தகவல்களின் படி, ஜூன் 17 முதலான 24 மணி நேரத்தில் 329 புதிய தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 43 இறப்புகளின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இத்தாலியின் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் சமீபத்தில் வெளியிட்டுள்ள பிராந்திய தரவுகளின்படி, இத்தாலியில் வைரஸ் தொற்று ஆரம்பித்தும், மிக மோசமான பாதிப்புக்குள்ளானதுமான லொம்பார்ட்டியா பிராந்தியத்தில்லேயே தற்போதும் அதிகளவிலான புதிய தொற்றுக்கள் (மொத்தம் 329 புதிய வழக்குகளில் 242 ) பதிவாகியுள்ளன. இத்தாலியின் ஆறு பிராந்தியங்கள் மட்டுமே வைரஸ் தொற்று, மற்றும் இழப்புக்கள் அற்ற பிராந்தியங்களாக பதிவுசெய்துள்ளன. தலைநகர் ரோம் உட்பட ஏனைய இடங்களில் சில தொற்றுக்களும் இழப்புக்களும் இப்போதும் உள்ளன.

இத்தாலியில் நாடாளவிய ரீதியாக தற்போது கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 23,925. இவர்களில் 3,113 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 163 பேர் மடடுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மிகுதி 20,649 பேர், நேர்மறையானவர்கள், அறிகுறிகள் இல்லாமல் அல்லது லேசான அறிகுறிகளுடன் தனிமையில் உள்ளனர். நாடளாவிய ரீதியில், தொற்று ஆரம்பமானதிலிருந்து ஜூன் 17 வரையிலான தொற்றாளர் எண்ணிக்கை 237,828. உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 34,448.

ஆக இத்தாலியில் இப்போது வைரஸ் தொற்றின் தாக்கம் உள்ளபோதும் கட்டுக்குள் உள்ளதாகவே கருதமுடிகிறது. ஆயினும் வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை குறித்த அச்சம் காரணமாகவே, சுகாதராத்துறை அதிகாரிகள், அவதானமான நடைமுறைமுறைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். இது ஒருபுறமிருக்க, இத்தாலியின் பிரதமர் கொண்டேயின் அரசு, கோவிட் காலத்தில் பெற்றுள்ள மக்கள் ஆதரவினால், இத்தாலியின் மீள் எழுச்சி குறித்த செயற்பாடுகளில் மிகத் தீவிரமாக இயங்கத் தொடங்கியுள்ளது. எதிர்கட்சிகளின் பெருந்தலைகள் மக்கள்  ஆதரவைக் குழப்பும் வகையிலான இடர்பாடுகளைத் தோற்றுவித்தாலும், அவைகளைக் கடந்து வேகமாகவே பயணிக்கின்றனர் கொண்டேயின் அமைச்சர்களும், அதிகாரிகளும்.

சுவிஸ் கோத்தார்ட் மலைப்பாதையில் கோரவிபத்து - ஆறு பேர் பலத்த காயம், இருவர் கவலைக்கிடம் !

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.