உலகம்

சுவிற்சர்லாந்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான A2 யில் அமைந்துள்ள 18 கிலோ மீற்றர்கள் நீளமான சென் கோத்தார்டோ சுரங்கப்பாதை, பராமரிப்புப் பணிகளுக்காக இந்த வாரத்தில் இரவு நேரங்டகளில் மூடப்பட்டது.

இதற்கான மாற்றுப் பாதையாக, மலைத் தொடரின் மேலாகச் செல்லும் பாதையான கோத்தார்டோ மலைப் பாதை திறக்கப்பட்டிருந்தது. அதிக வளைவுகளும், சுரங்கங்களும் நிறைந்த குறுகலான இந்த மலைப்பாதையில், அமைந்துள்ள ஃபியூட் சுரங்கப்பாதையில் நேற்று இரவு 10.35 மணியளிவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன.

காவல்துறைத் தரவுகளின் படி, மோதிக் கொண்ட இரு வாகனங்களில் ஒன்றான அல்பானியாவைச் சேர்ந்த ஒரு பி.எம்.டபிள்யூ வாகனத்தில் பயணித்த 39, 33, 25 வயதுடைய மூன்று அல்பேனிய பிரசைகளும், எதிர் திசையில் வந்த வந்த வாகனத்தில் பயணித்த வடக்கு அயர்லாந்தின் மூன்று பிரிட்டிஷ் குடிமக்களான 25, 27, வயதுடைய இரு ஆண்களும், மற்றும் 24 வயதுடைய ஒரு பெண்ணும், படுகாயமுற்றுள்ளார்கள். இந்த விபத்தினைத் தொடர்ந்து இன்று காலை 8.00 மணிவரை அந்தப்பாதை மூடப்பட்டு மீட்டுப்பணிகள் இடம்பெற்றன.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும், முதலுதவி தரவும், ஒரு ரெகா ஹெலிகாப்டர் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டன. 4 தீயணைப்பு வாகனங்களும் வீரர்களும், ஈடுபட்டன. விபத்தில் காயமுற்ற அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் நிலை கவலைக்கிடம் எனவும் அறியவருகிறது.

இத்தாலியில் இப்போது கொரோனா வைரஸ் நிலைமை என்ன ?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.