உலகம்

கோவிட் -19 தொடர்ந்து பரவி வருவதால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை உறுதிசெய்த உலகின் இரண்டாவது நாடாக பிரேசில் உள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் பதிவுசெய்யப்பட்ட புதிய வழக்குகளின் எண்ணிக்கை 54,000 க்கும் அதிகமானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து தீவிர நிலையிலேயே இருப்பதையடுத்து பிரேசில் நாட்டில் அண்மைய நாட்களாக அந்நோயினால் பாதிப்புற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அங்கு தொடர்ந்து நான்காவது நாளாக 1,200 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் மொத்த பலி எண்ணிக்கை 49,000 ஆக உள்ளது.

இந்நிலையில் அங்கு முறையான பரிசோதனை பற்றாக்குறை நிலவுவதாகவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அதன் உச்சநிலை சில வாரங்கள் தொலைவில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுவரை அமெரிக்கா மட்டுமே அதிக தொற்றுநோயாளர்களை கொண்டிருந்தது. தற்போது பிரேசிலின் ஏழ்மையான சமூகங்கள் மற்றும் பழங்குடி மக்கள் குறிப்பாக தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ நோய் பேரிடர் நெருக்கடிக்கு பதிலளித்ததற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த நோயை "சிறிய காய்ச்சல்" என்று வர்ணித்த தீவிர வலதுசாரி தலைவர் - வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தும், முக்கிய நகரங்களை முடக்கிய .மாநில ஆளுநர்கள் மற்றும் மேயர்களுடன் பலமுறை மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பிரேசில் கொரோனா நோய்த்தொற்றின் உச்சநிலையை இன்னும் எட்டவில்லை என கூறப்படுகிறது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.