உலகம்

இன்றைய நிலவரப்படி உலகளவில் இந்தியாவின் நட்பு நாடாக இருந்த நேபாளம் மற்றும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இணைந்து இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன.

முதலில் சீனாவும் பின்பு நேபாளமும் எல்லையில் அத்துமீறி இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானும் இந்திய எல்லையில் அத்துமீறத் தொடங்கியுள்ளது.

இதற்கு இந்தியாவும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் நேற்று கூட இந்திய இராணுவம் மூலம் 8 காஷ்மீர் தீவிரவாதிகள் எல்லையில் கொல்லப் பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ய பாகிஸ்தான் இராணுவம் டிரோன் விமானங்களை அனுப்பியிருந்ததாகவும் இவை இந்திய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் இச்செயற்பாடு ஒரு மோசமான சதித் திட்டம் என இந்தியா விமரிசித்துள்ளது. இதேவேளை உத்தரகாண்ட் அருகே நேபாளம் தனது படைகளைக் குவித்து வருவதால் சீனா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முக்கோண வியூகம் வகுத்து இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் இந்தியத் தரப்பில் கருதப் படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.