உலகம்

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்களின் பாதிப்பும் இறப்பு விகிதமும் குறைவடைந்தால் அங்கு பெரும்பாலும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறத் திட்டமிடப் பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்களை முன்கூட்டியே பெருமளவில் தடுக்கத் தவறியது, மற்றும் கருப்பினத்தவர்களது சுய உரிமை போராட்டங்களை மிக மோசமாகக் கையாண்டது போன்ற காரணங்களால் அதிபர் டிரம்பின் செல்வாக்கு இம்முறை தேர்தலில் பெருமளவு குறைந்துள்ளது என்று தெரிய வருகின்றது.

எதிர்வரும் நவம்பர் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு மிக அதிகளவில் உள்ளது என்பதைக் கண்டறிவதற்கான நாடளாவிய கருத்துக் கணிப்பு ஒன்று அண்மையில் அங்கிருக்கும் கின்னிபியாக் என்ற பல்கலைக் கழகம் சார்பாக நடத்தப் பட்டது.

இந்தக் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் தமது விருப்பங்களைத் தெரிவித்தனர். இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது பதவியில் இருப்பவருமான அதிபர் டொனால்ட் டிரம்புக்கு 41% வீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிடவிருக்கும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னால் துணை அதிபர் ஜோ பிடெனுக்கு ஆதரவாக 49% வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதில் டிரம்பை விட ஜோ பிடென் 8 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளதை வைத்தே எதிர் வரும் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு குறைந்துள்ளது என்பது கணிப்பிடப் பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.