உலகம்

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 9 006 759
மொத்த இறப்புக்கள் : 468 754
குணமடைந்தவர்கள் : 4 786 608
ஆக்டிவ் தொற்றுக்கள் : 3 751 397
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 54 727

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 348 839 : மொத்த இறப்புக்கள் : 122 204
பிரேசில் : 1 073 376 : 50 182
ரஷ்யா : 584 680 : 8111
இந்தியா : 426 910 : 13 703
பிரிட்டன் : 304 331 : 42 632
ஸ்பெயின் : 293 352 : 28 323
பெரு : 251 338 : 7861
சிலி : 242 355 : 4479
இத்தாலி : 238 499 : 34 634
ஈரான் : 204 952 : 9623
ஜேர்மனி : 191 575 : 8962
பாகிஸ்தான் : 176 617 : 3501
பிரான்ஸ் : 160 377 : 29 640
சீனா : 83 378 : 4634
சுவிட்சர்லாந்து : 31 292 : 1956
இலங்கை : 1950 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் கொரோனா தொற்றுக்கள் 9 மில்லியனை அதாவது 90 இலட்சத்தைக் கடந்துள்ளன. மேலும் விரைவில் உலகளாவிய கொரோனா தொற்றுக்கள் ஒரு கோடியை எட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஜுன் 14 ஆம் திகதியே 8 மில்லியனை எட்டியிருந்த கொரோனா தொற்றுக்கள் வெறும் 7 நாட்களுக்குள் 9 மில்லியனை எட்டியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்த படியாக பிரேசிலில் அதிகபட்சமாக 50 182 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சீனா தற்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பில் 2 ஆம் கட்ட ஆராய்ச்சிக்கு நகர்ந்துள்ளது. இதனை சீனாவின் மருத்துவக் கல்விக்கான அகாடமி உறுதிப் படுத்தியுள்ளது. இந்த 2 ஆம் கட்டப் பரிசோதனையில் முக்கியமாக சீனா தயாரித்து வரும் தடுப்பூசி மனிதர்களுக்கிடையே நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுமா என்று ஆய்வு செய்யப் படவுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைத் தொடருங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.