உலகம்

இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியில் நிலவி வரும் கடினமான சூழலைத் தீர்த்து வைக்க இரு நாடுகளுடனும் அமெரிக்க அரச நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஓக்லஹோமா புறப்பட முன்பு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

'தற்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையானது இரு தேசங்களுக்குமே பெரிய பிரச்சினை தான். இதில் இருந்து இவையிரண்டுமே விடுபட நாம் உதவ முயற்சிப்போம். அடுத்து என்ன நிகழ்கின்றது என்று பார்ப்போம்.' என்றுள்ளார். கடந்த மாதம் எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என டிரம்ப் அறிவித்த வேளையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே அதற்கு இணங்கவில்லை. நாமே இதனைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று அறிவித்து விட்டன.

ஜூன் 2 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்திய, சீன எல்லைப் பிரச்சினையில் அமெரிக்க அரச நிர்வாகத்தைச் சேர்ந்த பல எம்பிக்கள், உயரதிகாரிகள் பலர் இந்தியாவுக்கு ஆதரவாகவே உள்ளனர். சீனா நம்பகத்தன்மையற்ற நாடு என்பது இவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.