உலகம்

லாக்டவுன் தளர்வுக்குப் பின் 11 ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 9 820 344
மொத்த இறப்புக்கள் : 494 219
குணமடைந்தவர்கள் : 5 303 848
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 022 277
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 57 544

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 533 814 : மொத்த இறப்புக்கள் : 127 154
பிரேசில் : 1 244 419 : 55 304
ரஷ்யா : 620 794 : 8781
இந்தியா : 509 446 : 15 689
பிரிட்டன் : 309 360 : 43 414
ஸ்பெயின் : 294 985 : 28 338
பெரு : 268 602 : 8761
சிலி : 263 360 : 5068
இத்தாலி : 239 961 : 34 708
ஈரான் : 217 724 : 10 239
பாகிஸ்தான் : 195 745 : 3962
ஜேர்மனி : 194 042 : 9017
பிரான்ஸ் : 162 936 : 29 778
பங்களாதேஷ் : 130 474 : 1661
சீனா : 83 462 : 4634
சுவிட்சர்லாந்து : 31 486 : 1962
இலங்கை : 2014 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 98 இலட்சத்தைக் கடந்தும், மொத்த இறப்புக்கள் 4 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. லாக்டவுன் தளர்வுக்குப் பின் ஐரோப்பாவில் 30 நாடுகளில் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதாக உலக சுகாதாரத் தாபனமான WHO கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 11 நாடுகளில் கொரோனா தொற்று அண்மைக் காலத்தில் வேகமெடுத்திருப்பதாக உலக சுகாதாரத் தாபனத்தின் ஐரோப்பியப் பிரிவு இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி லூக் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த 11 நாடுகளின் பட்டியலில் சுவீடன், அர்மீனியா, அசர்பைஜான், கசாகிஸ்தான், அல்பானியா, பொஸ்னியா மற்றும் உக்ரைன் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.