உலகம்

அமெரிக்காவின் 'I ♥ NY'எனும் புகழ்மிக்க சின்னத்தை உருவாக்கிய கிராஃபிக் வடிவமைப்பாளர் மில்டன் கிளாசர் தனது 91 வயதில் காலமானார்.

1977ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை மேம்பாட்டு பிரச்சாரத்திற்காக "நியூயார்க் நகரை நான் விரும்புகிறேன்" எனும் கரும்பொருளில் 'I ♥ NY' என தயாரிக்கப்பட்ட இந்த சின்னம் உலகம் முழுவதும் மிக விரைவாக பெரிய அங்கீகாரத்தைப் பெற்றது. வரலாற்றில் அடிக்கடி இந்த சின்னத்தை பல நாடுகளும் பின்பற்றியதாக விவரிக்கப்படுகிறது. இதனை முதன் முதலாக உருவாக்கி வெளியிட்டவர் அமெரிக்காவின் மில்டன் கிளாசர் எனும் கிராஃபிக் வடிவமைப்பாளர் ஆவார்.

இவர் சைகடெலிக் கூந்தலுடன் பாப் டிலானின் புகழ்பெற்ற சுவரொட்டியையும் உருவாக்கியவரும்;  நியூயார்க் பத்திரிகையின் இணை நிறுவனரும் ஆவார்.


மில்டன் கிளாசர் 1929 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தின் பிராங்க்ஸ் பெருநகரத்தில் பிறந்தார். மன்ஹாட்டனில் உள்ள ஒரு கல்லூரியில் அறிவியல் மற்றும் கலை முன்னேற்றத்திற்கான பயிற்று பின்னர் இத்தாலியின் போலோக்னாவில் உள்ள நுண்கலை அகாடமியிலும் கல்வி கற்றார்.

1954 ஆம் ஆண்டில், கிளாசர் தன் மூன்று வகுப்பு தோழர்களுடன் இணைந்து புஷ் பின் எனும் ஸ்டுடியோவை அமைத்தார். வணிக ரீதியான காட்சிக்கலைப்படைப்பிற்கு ஒரு புதிய காட்சி மொழியைக் கொண்டுவர உதவினார். பண்டைய ஆர்ட் நோவியோ முதல் சீனக் கழுவும் வரைநுட்பம், ஜெர்மன் மரத்துண்டுசிற்பங்கள் மற்றும் 1930 ஆண்டுகளின் கார்ட்டூன் வரைகலை போன்றவற்றை தழுவிய இவரது படைப்புக்கள் தனிக்கவனம் பெற்றன.

அவரது பாப் டிலானின் சுவரொட்டி 1967ஆம் ஆண்டு இசை ஆல்பமான கிரேட்டஸ்ட் ஹிட்ஸில் சீடி கவர் படமாக சேர்க்கப்பட்டு; ஆறு மில்லியன் ரசிகர்களால் வாங்கப்பட்டது, மேலும் பல எண்ணற்ற சுவர்களை அலங்கரித்தது.

1968 ஆம் ஆண்டில், கிளாசர் நியூயார்க் பத்திரிகையை துணை நிறுவினாராக செயல்பட்டதுடன் ஒன்பது ஆண்டுகள் அதன் வடிவமைப்பு இயக்குநராகவும் இருந்தார். அவர் அறுபதுகளின் பிற்பகுதியில், மந்த நிலையில் செயற்பட்டுக்கொண்டிருந்த நியூயார்க் பத்திரிகையை தலை சிறந்த அமெரிக்க பத்திரிகையாக மாற்றியது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து 1974 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த வடிவமைப்பு நிறுவனமான Milton Glaser, Inc. இணை உருவாக்கிக்கொண்டார்

 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மில்டன் தனது சொந்த நகரத்தின் சுற்றுலாவை மேம்படுத்த உதவுவதற்காக "I ♥ NY" சின்னத்தை இலவசமாக வடிவமைத்தார். அவர் ஒரு டாக்ஸியில் சவாரி செய்யும் போது இந்த யோசனையை தோன்றவே அதை ஒரு உறை மீது சிவப்பு நிறத்தில் எழுதிக்கொண்டார். அது இப்போது நவீன கலை அருங்காட்சியகத்தின் (MoMA) நிரந்தர சேகரிப்பில் உள்ளது. ஆனால் 20ஆம் நூற்றாண்டை கடந்தபின்னும் இந்த தனித்துவமான சின்னம் மிகவும் பரவலான காட்சிப்படங்களில் ஒன்றாக மாறியிருப்பது குறிப்பிடதக்கது.

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச எய்ட்ஸ் சின்னம் மற்றும் சுவரொட்டி, மற்றும் மேட் மென் இறுதித் தொடருக்கான விளம்பரம் ஆகியவற்றை வடிவமைத்ததற்காகவும் மில்டன் கிளாசர் அறியப்படுகிறார்.

2004 ஆம் ஆண்டில், கூப்பர்-ஹெவிட், ஸ்மித்சோனியன் வடிவமைப்பு அருங்காட்சியகத்தால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்தோடு அவருக்கு தேசிய கலை பதக்கமும் முன்னால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் 2010 இல் வழங்கப்பட்டது.

உடல் நலக் குறைவால் மில்டன் கிளாசர் தனது 91வயதில் காலமானார். உலகின் பல கணனி வடிவமைப்பாளர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.