உலகம்

சுவிற்சர்லாந்தின் வர்த்தக நகரான சூரிச்சில், ஜூன் 21 மாலை, இரவு விடுதி ஒன்றின் டிஸ்கோ பார்ட்டியில் கலந்து கொண்ட சுமார் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

21ந் திகதி பார்ட்டியில் கலந்து கொண்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, பார்ட்டியில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா வைரஸ் சோதனை பரிசோதனையின் போது தொற்றாளராக அடையாளங்க காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பொது, மேலும் ஐவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளதாக அறியப்பட்டனர். இதனைத் தொடர்ந்து , அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் 300 பேர் வரையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் அறிய வருகிறது.

சூரிச் மாநில சுகாதாரத்துறையின் கவனத்துக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தலில், விடுதி ஊழியர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட சுமார் 300 பேர் வரையில், 10 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சூரிச் அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் வைரஸ்தொற்றுக் கட்டுபாடுகளின் தளர்வுகளுக்குப் பின் ஏற்பட்ட முதலாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளதாகவும், இச் சம்பவம், சமூக விலகல் விதிகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், தனிப்பட்ட பொறுப்பையும் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுகாதாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கையாக இருக்கவும், கூட்டங்களைத் தவிர்க்கவும், அது சாத்தியமில்லாத இடத்தில், முகமூடியை அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதை நினைவுபடுத்திய அதிகாரிகள், இவ்வாறான தொற்றுக்கள் தொடருமாயின், இரவு வீடுதிகள் மீண்டும் மூடப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மத்திய கூட்டாட்சி சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட், " கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார நடவடிக்கைகளுக்கு மக்கள் இணங்கவேண்டும். லேசான அறிகுறிகளுடன் கூட, மக்கள் சோதிக்கப்பட வேண்டும். ஒருவர் நோய் தொற்றுக்கு உள்ளானது கண்டறியப்பட்டால், தனிமைப்படுத்துவது தனிப்பட்ட பொறுப்பு மற்றும் சமூகத்தை நோக்கிய ஒரு பாதுகாப்பு விஷயம் " என்றும் சுவிஸ் வானொலிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், " மக்கள் சுதந்திரமாகவும், நிதானமாகவும் வாழக்கூடிய காலங்களாக இது நிச்சயமாக உள்ளது. ஆனால் அது அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று அர்த்தமல்ல. மேலும் வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலையை எதிர் கொள்வதற்கு அதிகாரிகள் நன்கு தயாராக உள்ளனர். ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த மக்களும், நிறுவனங்களும், அதற்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியம். நாங்கள் உண்மையில் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க ஒரு குறிப்பிட்ட தூரத்தை வைத்திருங்கள், அது முடியாத போது முகமூடியை அணியுங்கள். நிச்சயமற்ற இந்த சூழ்நிலையில், அவசரமற்ற அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் கைவிடுவதும், கோடை விடுமுறைகளை சுவிட்சர்லாந்தில் கழிப்பதும் மிகச் சிறந்த விஷயமாக இருக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மத்திய அரசு அறிவித்தலின் படி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.