உலகம்

இத்தாலியின் தெற்கு காம்பானியா பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டிற்கு, வெள்ளிக்கிழமை இத்தாலிய இராணுவம் மற்றும் கலகப் பிரிவு பொலிஸ் படைஎன்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாப்போலிக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொன்ட்ராகோனில் உள்ள ஐந்து தொகுதிகள் கொண்ட ஒரு வளாகத்தில் சுமார் 700 பேர் 15 நாட்கள் பூட்டப்பட்டிருந்தனர் என்று பிராந்திய ஆளுநர் வின்சென்சோ டி லூகா வியாழக்கிழமை தெரிவித்தார்.

வெளிநாட்டு பண்ணை தொழிலாளர்கள் மத்தியில், 43 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அனைத்து குடியிருப்பாளர்களிடமும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியில் உள்ள ஆயிரக்கணக்கான பெருந் தோட்டங்களில் ஒன்றான, பலாஸ்ஸி சிரியோ எஸ்டேட்டில், ஆவணப்படுத்தப்படாத வெளிநாட்டினரை கொடூரமான சூழ்நிலைகளில் வாழ வைக்கப்படுகிறார்கள் என கோரியர் டெல்லா செராவின் தலையங்க ஆசிரியர் கோஃப்ரெடோ புசினி எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறான பண்ணையில், நான்கு ஆவணமற்ற பல்கேரிய தொழிலாளர்கள், மற்றும் ஒரு இத்தாலியர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் !

அவ்வாறு முடக்கபட்ட பகுதிகளிலிருந்து, உணவுக்காக பணம் சம்பாதிக்க வேலைக்கு திரும்ப விரும்பிய விரக்தியடைந்த பல்கேரியர்களுக்கும், வைரஸ் பரப்புவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டிய உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

சென்ற வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வெளியே வந்த நூற்றுக்கணக்கான பல்கேரியர்களை உள்ளே திரும்பும்படி பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பின்னர், அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறியதை அறிந்த உள்ளூர்வாசிகள் கற்களையும் குப்பைத்தொட்டிகளையும் அவர்களை நோக்கி வீசத் தொடங்கினர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தோட்டத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 43 தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், 100 தொற்றாளர்கள் சோதனைகளில் கண்டறியப்பட்டால், முழு கடற்கரை நகரமும் பூட்டப்படும் என்று பிராந்திய ஆளுனர் டி லூகா தெரிவித்துள்ளார். மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர், கன்காணிப்பு வலையில் இருந்து நழுவி காணாமல் போயுள்ளனர், ஆயினும் தோட்டத்தின் கண்காணிப்பு இனி 24 மணி நேரம் இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.

இத்தாலிய ஊடகங்கள், தளர்வின் பின்னதாக இந்த வாரம் நாடு முழுவதும், வைரஸ் தொற்று அதிகமாயிருந்த 10 இடங்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. வடக்கில் கோமோ மற்றும் அலெஸாண்ட்ரியாவில் உள்ள பராமரிப்பு இல்லங்கள் மற்றும் ரோமில் உள்ள ஒரு மத நிறுவனம் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.